- Sunday
- May 4th, 2025

சுமார் ஆறு வருடங்களின் பின் முதல் முறையாக கடந்த மார்ச் மாதமே இலங்கையில் வாழ்க்கைச் செலவு குறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல வருடங்களின் பின்னர் மக்கள் சிரமம் இன்றி புதுவருடத்தை கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அல்பிடிய நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பிரதேசத்துக் கிணறுகளில் 85 சதவீதமானவற்றில் கழிவு ஒயில் மாசு இல்லை என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன் அவர்களினால் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வலிகாம நீர் பிரச்சினை தொடர்பிலான விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் பாரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ள வலிகாம நீர் பிரச்சினை தொடர்பில் ஆராயும் பொருட்டு விசேட கூட்டம் ஒன்று இடம் பெற்றது. மேற்படி கூட்டத்தில் வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், விவசாய அமைச்சர் மற்றும் வலிகாம பிரதேசசபைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து...

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, துன்னாலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை (10) இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட குழு மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் சனிக்கிழமை (11) தெரிவித்தனர். துன்னாலை கலகை கந்தன் ஆலயத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, துன்னாலை தக்குச்சம்பாட்டி மற்றும் கலிகை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட...

யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகள் விடுவிப்பின் 2 ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அதனை மக்களும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே - 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே - 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம்...

தேர்தல் முறைமை மாற்றத்தை 20ஆவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருவதற்காக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து எம்.பிக்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கும் நோக்கில் இனந்தெரியாத மர்ம நபர்கள் துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் மேற்படி ஊடகவியலாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தூய நீருக்கான உறுதிமொழியை வேண்டி உண்ணாவிரதம் இருந்தவர்களை, வட...

இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி வீதி, மடத்தடியில் அமைந்துள்ள யூ.பி.லி சுகாதார மருத்துவ நிலையம் வெள்ளிக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஆனையாளர் எஸ்.பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிலையத்தை திறந்து வைத்தார். யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலேட்...

யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் அடுத்த கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார். 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கம் அறிவித்த அறிவிப்புக்கமைய முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும், வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள்...

சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும், கிறீஸும் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார். சுன்னாகம் பிரதேசத்தின் கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என்று...

தேர்தல் சட்டம் மற்றும் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய எதிர்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசு கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை தமிழரசு கட்சி தமது வாதத்தை முன்வைத்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

புத்தாண்டில் மது பாவனை மற்றும் புகைத்தல் என்பவற்றை குறைப்பதற்கான பிரசார நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று போதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் சங்கைக்குரிய அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (10) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். அவர்...

இன்ரர்போல் பொலிஸார் இலங்கைக்குள் இலகுவாக வந்து விசாரணைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக விசேட 'விஸா' வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்ரர்போல் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த விசேட விஸா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்ரர்போலின் விசாரணைகளுக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு சில நாடுகளே விசேட விஸா அனுமதியை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண சபையில் இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் உரிய பதில்களை அனுப்பாது காலம் தாழ்த்துகின்றன எனவும், இவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- மாகாண சபையில் தீர்மானம்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த மாணவனை 3ஆம் வருட முகாமைத்துவபீட பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதை முறையில் தலைக்கவசத்தால் பின்தலையில் அடித்து உடைத்த சம்பவம் நேற்று மாலை 3மணியளவில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவத்தால் ஏனைய பல்கலை மாணவர்களும் பயத்தின் நிமித்தம் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன் இது தொடர்பில் வடமாகாண சபை அசமந்தப் போக்கில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது என்று வடக்கு மாகாண முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில்மேலும்...

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இரண்டாவது கட்டமாக மேலும் 570 ஏக்கர் காணி மீள் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது. இன்று (10) வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 570 ஏக்கர் காணிகளை பார்வையிட மீள்குடியேற்ற செயலணி மற்றும் அரச அதிபர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் செல்லவுள்ளனர். பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1000...

தென்மராட்சி – மட்டுவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட ´ஆவா´ குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அதே தினத்தில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் நேற்றய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்...

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு கடும்போக்குவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் அரசியல் இலாபம் திரட்டிக்கொள்ள சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தெற்கின் பேரினவாத கட்சிகள் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தமிழர் ஒருவருக்கு வழங்குவதனை விரும்பவில்லை என...

All posts loaded
No more posts