Ad Widget

புத்தாண்டில் மது மற்றும் புகைத்தலை நிறுத்த உறுதி பூணுவோம்

புத்தாண்டில் மது பாவனை மற்றும் புகைத்தல் என்பவற்றை குறைப்பதற்கான பிரசார நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று போதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் சங்கைக்குரிய அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

athulukareya-therar-pikku

ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (10) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- இலங்கையில் நாளொன்றுக்கு சட்டரீதியாக விற்கப்படும் புகைத்தல் பொருளுக்கு 25 கோடி ரூபாவும் மது பாவனைக்கு 20 கோடி ரூபா செலவிடப்படுகிறது. சட்ட விரோத புகைத்தல் பொருள்- மதுபான விற்பனை என்பவற்றால் இத்தொகை 60- 70 கோடி ரூபாவை தாண்டலாம்.

மீனராசி மேஷ ராசிக்கு செல்லும் இப்புது வருடம் நாட்டுக்கு நன்மை பயக்கும் ஆண்டு. இந்த வருடம் புத்தாண்டில் அன்புக்கு பாசத்துக்கும் ஒற்றுமைக்கும் இடம் கொடுப்போம். மது போத்தலை வீட்டுக்கு எடுத்து வந்து சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம்.

நாட்டின் பிரதான இனங்கள் இரண்டான தமிழ் – சிங்களவர் இணைந்து கொண்டாடும் இப்புத்தாண்டில் மது மற்றும் புகைத்தல் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற உறுதி மொழியை எடுப்போம். எந்த சமயமும் போதைப் பொருட்களை ஆதரிக்கவில்லை. எனினும் எம்நாட்டில் மதுபாவனை அதிகரித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு நாம் மேற்கொண்ட முயற்சியால் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. அந்த ஆண்டு பத்திரிகைகளில் இது தலைப்புச் செய்தியாக வெளிவந்தது. இந்த ஆண்டும் அதனை நாம் பின்பற்றுவோம். இனிவரும் காலங்களில் நாட்டில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு இந்த புத்தாண்டை காரணமாக கொள்வோம் என அவர் தெரிவித்தார்.

Related Posts