- Sunday
- September 27th, 2026
யாழ்ப்பாண பல்கலைகழக 1ஆம் வருட மாணவனை அடித்து துன்புறுத்திய இரு மாணவர்களை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், திங்கட்கிழமை (09) உத்தரவிட்டார். துன்புறுத்தலுக்கு உள்ளான 21 வயதுடைய மாணவன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த மாணவனை 3 ஆம் வருட மாணவர்கள்,...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நேற்று முதல் இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார். கடந்த தினங்களில் தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக்கோரி சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக உரிய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்க கோரும் அதிகாரம் எம். ஏ சுமந்திரனுக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) அவர்கள் இன்று (09-11-2015) காலமானார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10-11-2015) செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கந்தரோடையில் நடை பெற்றுத் தகனக் கிரியை கந்தரோடை இந்து மயானத்தில் நடை பெறும். 1933ல் காரைநகரில் பிறந்த இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார்.உசன்...
அச்சுவேலி அரச சான்று பெற்ற பாடசாலையில் மகளிர் விவகார அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்புக் கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திங்கட்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில், 11 அறைகள், மருத்துவ அறை, தொழிற்பயிற்சி...
யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று வீசி வருவதால், தீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை (09) காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடும் காற்றுக்காரணமாக பாடசாலையின் கூரைகள் தூக்கி எறியப்படும் நிலையில் இருந்தமையால் மாணவர்களால் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவில்லை என்றும் இதனாலேயே...
ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள்...
கடந்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கா அரசினால் கைது செய்யப்பட் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படாது தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த மாதம் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களது...
இணுவில் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் இறுதிக்கிரியைகளை, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடத்தியுள்ளனர். புலோலியூரைச் சேர்ந்த மேற்படி முதியவர், கடந்த 20 வருடங்களாக இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை, அடியவர் என புனைப்பெயர் கொண்டு...
எங்களுடைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு நடந்துகொண்டாலே உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என தென்னாபிரிக்க அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் தொண்டர் நிறுவனங்களுக்கு தெரிவித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தென்னாபிரிக்க...
வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடயங்களிலும் நான் தலையீட்டை மேற்கொள்ளாமல் நடுநிலையாகச் செயற்படுவேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் வைத்துக்...
தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்திய மீனவர்கள் 04 பேர் இன்று திங்கட்கிழமை அதிகாலை மாதகல், வலித்தூண்டல் கடற்கரையில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். இராமநாதபுரம், கோலியக்கரையைச் சேர்ந்தவர்களான குஞ்சப்பன் பாலசுப்பிரமணியம் (வயது 60), கணேசன் இராஜகண்ணா (வயது 55), மணிவண்ணன் வீரமணி (வயது 30), பழனித்துரை செல்வன் (வயது 28) ஆகியோரே கரையொதுங்கினர். இவர்களின் மீன்பிடி...
சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தில் கடந்த காலங்களை விட இந்த வருடம் சிறுவர்கள் மத்தியில் தொழுநோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய்ப் பிரிவு எச்சரித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தொழு நோய்த் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. அதிலும் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே அதிகமாக இந்த...
யாழ்.மாவட்டத்தில் வாகனங்களுக்கு புகைப்பரிசோதனை மேற்கொள்ள வருபவர்கள் முக்கிய ஆவணங்களை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதென்பதுடன் அவ்வாறு கொண்டுவரத் தவறும் பட்சத்தில் புகைப்பரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாது என யாழ்.மாவட்டச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புகைப்பரிசோதனையின் போது மூலப் பதிவுச் சான்றிதழ் (Original Certificate of Registration) அல்லது வாகன அடையாள அட்டை மூலப்பிரதி (Original Vehicle Identy Card) இனை...
மலரும் தீபாவளி திருநாளில் வடகிழக்கு மக்களின் வாழ்வில் இருக்கும் துன்ப துயரங்கள் மறைந்து நல்வாழ்வு மலரட்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது தீபாவளி நல்வாழத்துக்களை தெரிவித்துள்ளார். இருள் நீங்கி ஒளி சேரும் ஒரு நாள். பழையன கழிதலும், புதியன வருதலும் பழைய இருளடைந்த வாழ்க்கை நீக்கப்பட்டு, புதியதொரு ஒளி மிகுந்த வாழ்க்கையை வரவேற்பதே தீபாவளியின்...
விடுதலை கோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் (பொதுவேலைநிறுத்தம்) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் அலுவலகங்களையும் மூடி இந்த ஹர்த்தாலுக்கு...
ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் தேசிய உணர்வைக் கொச்சைப்படுத்தும்...
வடக்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு அபாயம் நீடிப்பதால் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 300 கிலோமீற்றருக்கு அப்பால் மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் தாழமுக்கம் மையங்கொண்டுள்ளது. இதனால் கடும் காற்று வீசுவதுடன் மிகக் கொந்தளிப்பான கடலும் காணப்படும்....
Loading posts...
All posts loaded
No more posts
