- Friday
- November 21st, 2025
அரசியல் கைதிகளின் வழக்குகளை நடத்துவதற்கு தேவையான நிதி சேகரிப்பதற்காக ஓர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் நிதியை திரட்டி வழக்கை நடத்துவோம் என எண்ணியிருந்தோம். எனினும், அந்த அமைப்பை ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவர முடியாமல் போய்விட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 'சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அரசியலாக்கப்பட்டமையால் அவர்களுக்கு விடுதலை...
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம், புதன்கிழமை (30) உத்தரவிட்டார். பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதிலிருந்து தப்புவது தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றை, தென்மராட்சி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் அண்மையில் இந்தப்...
'எங்கள் அப்பாவை கட்டியணைக்க ஆசையாகவுள்ளது, ஜனாதிபதி மாமா, எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள்' என்ற கோஷத்துடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பிள்ளைகள், யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (30) பேரணியொன்றை நடத்தினர். யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி, முதலமைச்சர் அலுவலகம் வரைச் சென்றது. அதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு கோரி...
எமது நாட்டில் வாழ்கின்ற பிள்ளைகளின் இதயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மரண பயம், அவர்களின் இதயங்களில் மீண்டும் சூழ்கொண்டுள்ளது. இது தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சேயா சந்தவமி கொலை மற்றும் சிவலோகநாதன் வித்யா என்ற...
மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸும் வவுனியாவிலிருந்து பனங்காமம் நோக்கிச்சென்ற பஸ்ஸும் மல்லாவி ஒட்டறுத்தகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி...
சுன்னாகம் கந்தரோடை மடம் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள், பொல்லுகள், தடிகள் சகிதம் வந்த இளைஞர் கும்பல் ஒன்று அந்தப் பகுதியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் வேலிகளை வெட்டி வீழ்த்தியதுடன் அந்த வீட்டில் இருந்த கல்வி கற்கும் மாணவனையும் தாக்கி அட்டகாசம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்....
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல் ஆகியன மூலமாக கடந்த கால பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ஆவது மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிலையான அபிவிருத்தி மற்றும்...
ஊடக சுதந்திரத்துக்கான எஸ்மண்ட் விக்கிரமசிங்க விருது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு வழங்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அதன் நிறுவுனர் பி. சரவணபவன் உதயன் பத்திரிகைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். யுத்த காலத்தில் பலத்த சவால்களுக்கு மத்தியில் செயற்பட்ட உதயன் நிறுவனம் தமிழ் மக்களின் குரலை ஏனைய...
கடற்படையின் நீரியல் அளவைப் பிரிவினரினால் வடக்கு கடற்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட அளவைக்குறிகளின் தொடர்களை இலங்கை கடற்படையின் பிரதம நீரியல் அளவையியலார் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி மற்றும் இலங்கை அளவையியல் திணைக்களத்தின் சிரேஷ்ட உயரதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும், தேசிய அளவைக்குறிகளுடன் இணைக்கப்படும் நோக்கில் காங்கேசன்துறை மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அளவைக்குறிகளானது, 86 வருடங்களின் பின் சராசரி...
அண்மைக்காலமாக வௌியாகி வரும் தமிழ் திரைப்படங்கள் சிறுவர்களை இலக்கு வைக்கும் விதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையொன்றும், 'நிதர்சனம்' பத்திரிகை வௌியீடும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் (ADIC) நேற்று (30) வௌியிடப்பட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ் இரண்டு வௌியீடுகளும் நடைபெற்றன. இன்று (01) இடம்பெறவுள்ள...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதம் நேற்றய தினம் ஜெனிவா அமர்வில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் சைட் ராத் அல் ஹூசைன் அறிக்கை தொடர்பில் உரையாற்றிய காணொளி ஔிபரப்பட்டது. இலங்கையில் 2015ம் ஆண்டுக்குப் பின் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் வடக்கு...
உலக சிறுவர் தினமாகும் இன்றாகும். உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு சிறுவர் தினத்தின் தொனிப்பொருளானது ´சிறுவருக்கு நட்புறவான சூழல்- உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம்´...
கொழும்பு நகர சபைப் பகுதியில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகள் என இணங்காணப்பட்ட இருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தாக்குதலுக்கு உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட வேலாயுதம் வரதராஜ் என்பவருக்கு 290 வருடங்களும் சந்திரா ரகுபதி என்பவருக்கு 300 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் இலங்கை இனப்படுகொலை விசாரணை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை யில் இவ்வாறு தெரிவித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையானது மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியை மட்டும் விசாரித்து இருந்த போதிலும், இதுவரைகாலத்தில் வந்துள்ள அறிக்கைகளுள் இலங்கையில் பாரியளவில் இழைக்கப்பட்ட மிகக்கொடூரமான குற்றங்கள் பற்றிய தகவல்களை...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையர்களை விடுதலை செய்ய கோரி இன்று யாழில் சிறுவர்கள் போராட்டம் நடாத்தி இருந்தனர்.அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்ட...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ் இந்துக்கல்லூரி புகைப்பட கழகம் மற்றும் இளசுகள் அமைப்பின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பழைய மாணவா்களான தமிழருவி கவிஞர் அ.உமாகரன் மற்றும் இசையமைப்பாளா் த.மதீசன் ஆகியோரின் கைவண்ணத்தில் “தாய் மடியே..” எனும் ஒளிப்பட இறுவட்டும், “தோழா” என்கின்ற இசைத்தட்டும் 26.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்லூரியில்...
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டும் மாறாக குற்றவாளிகளான இலங்கை அரசாங்கத்தின் விருப்பம் உள்வாங்க தேவையில்லை, சர்வதேச சமூகம் இது சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டுமென அமெரிக்கத் தீர்மானம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும்நிலையில் அதில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள்...
இலங்கை தொடர்பான உத்தேச வரைவுத் தீர்மானம் தொடர்பாக தமிழ் அரசியற் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் கூட்டறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளன. அறிக்கை வருமாறு . ‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் செப்ரெம்பர் 30ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும்...
பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகள் நடத்தப் படுவதைத் தடைசெய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது எனக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை நேரமான காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு இன்னும் சில நாள்களில் முடிவெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை நேரங்களிலும், தனியார் வகுப்புகளை தனியார் கல்வி நிறுவனங்கள்...
போலியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த இளைஞரொருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி கடவுச்சீட்டில் கனடா நாட்டுக்குரிய போலி விசாவும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
