- Friday
- November 21st, 2025
சாவகச்சேரி - சப்பச்சிமாவடிப் பிரதேசத்தில் வயோதிபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு திங்கட்கிழமை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். வடக்கு மீசாலையை வதிவிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா நவசிவாயம் என்ற 63 வயதுடைய வயோதிபர் நேற்றிரவு முதல் காணாமற்போயிருந்தார். இந்நிலையில், சப்பச்சிமாவடியிலுள்ள மகளின் வீட்டுக்கு அருகிலுள்ள காணியில்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனையினை விரைவு படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மாணவியின் மூக்குக் கண்ணாடியினை பயங்கரவாத தடைச்சட்ட பிரிவினரிடம் கையளிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 13 ஆம் திகதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று...
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் ஒர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப் பாவனை குறைவடைந்திருந்ததாக, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், எம்.சீ.விக்ரமசேகர தெரிவித்துள்ளார். வார இறுதியில் இரவு 09.00 மணிக்குப் பின்னர்...
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரி அனுமதி - 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தsrilanka law collegeமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில்...
“நானும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சதீஸ் அவர்களும் சந்தித்து இவ்வாறு ஒரு மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். அது இன்று வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது. ‘தினச்செய்தி’யின் பிரதம ஆசிரியர் திரு.கே.ரீ.இராசசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வடக்கின் வல்லவன் விளையாட்டு விழாவில் சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். அப்பொழுது...
தமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையர் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என...
கடந்த வாரம் யாழ்.நகரப் பகுதியில் வைத்து காடைத்தனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு யாழ். இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியையின் கணவர் ஒருவர் அநியாயமாக உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் வருமாறு:- புதுமணத்த தம்பதிகளாய் குடும்ப வாழ்க்கையில் இணைந்திருந்த சக...
வடக்கு மாகாணத்தில் போரினால் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடக்கு மாகாணத்தில் போரின் போது காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டமொன்றை வடக்கு மாகாண சுகாதார...
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சர்வதேச விசாரணையின் மூலமே நியாயம் கிடைக்குமென பிரித்தானியாவின் இல்பேர்ட் வடக்கு தொகுதிக்கான கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான நான் கடந்த 10 வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவருவதுடன்...
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபானது உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதற்கான ஒரு பாதையை அமைத்துக்கொடுக்கும்'' என்று அமெரிக்கா வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் இரவு...
புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தி, அதனூடாக நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றை மேமம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் அங்குள்ள விகாரையயான்றுக்குச் சென்றார். இங்கு கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு...
பட்டதாரிகள் பலர் உண்ண உணவில்லையானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், அரசாங்க சம்பளத்திலும் பல மடங்கு கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை எமது இளைஞர்கள் யுவதிகள் உதாசீனம் செய்வதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண...
அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ம் திகதி யாழ். நகரப் பகுதியில் வைத்து, ஆசிரியரான சண்முகவேல் மாதவமணிவண்ணன் மற்றும் அவரது மனைவியும் சிலரால் தாக்கப்பட்டனர். இதனால் படுகாயமடைந்த ஆசிரியர் யாழ்....
யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவினர் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தடன் இணைந்து யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அந்தந்தப் பிரிவில் உள்ள சனசமூக நிலையங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஒவ் வொரு பிரிவிலும் கண்டறியபடாமல் இருக்கும் நீரிழிவு நோய்,உயர் குருதி அமுக்கம், அதிகரித்த உடற்பருமன்,...
நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவிக்கு வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியிலிருந்து காயப்பட்ட பொதுமக்களின் மருத்துவ உதவிகளை இவர் மேற்கொண்டிருந்தார். இதேவேளை, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளராக க.நந்தகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் கற்று, இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியோர் மற்றும் இறுதிப் பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள், அடிப்படை சித்தி அடைந்தவர்கள் ஆகியோரின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. எனவே, மேற்குறித்த நிலையிலுள்ளவர்கள் அலுவலக நேரத்தில் வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் அறிவித்துள்ளார். இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியவர்கள் மற்றும் இறுதிப் பரீட்சையில்...
நெடுந்தீவு 9ஆம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (26) இரவு அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாயை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார். வீடொன்றுக்குள் அத்துமீறி கடற்படைச் சிப்பாய் நுழைந்த போது, அங்கிருந்தவர்கள் அபாயக் குரல் எழுப்பியதும் தப்பிச் சென்றுள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
