- Saturday
- May 16th, 2026
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாக் கடலில் காணப்பட்ட தாழமுக்க வலயமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. அது தற்போது இலங்கையின் வடகிழக்கிற்கு மிக அண்மையில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தினால் மேகமூட்டத்துடன் கூடிய மழை கொண்ட காலநிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் கடும் காற்றும் வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இலங்கைத்தீவின்...
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சக தமிழ் அரசியல் கைதிகளின் மன அழுத்தங்களை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அத்துடன் அவர்களால் “சாவின்...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதுடன், உயிராபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் எம்மிடத்தில் உள்ளது. இது தொடர்பாக திங்கள் வரை காத்திருக்காது, விரைந்து செயற்படுமாறு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- நீண்ட ஆண்டுகளாக எவ்வித...
வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் (15) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150...
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,...
வடமாகாணத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குமாறு வடமாகாண அமைச்சர்களுக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார். 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட...
இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் நேற்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது நீரில் மூழ்கியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, அழகரத்னம் வீதியில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்....
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியன் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றினார். கட்சியன் உறுப்பினர்கள் பொதுஆதரவாளர்கள் மலர் வணக்கம் செலுத்தினர். நேற்று பிற்பகல் 4.00 மணியளவில்...
அடாது தொடர்ந்து பெய்;து கொண்டிருக்கும் மழையின் மத்தியிலும் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மரநடுகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. வவுனியா ஒமந்தையில் நேற்று சனிக்கிழமை(14.11.2015) 15ஏக்கர் பரப்பளவில் தேக்கமரக்காடு ஒன்றை உருவாக்கும் நோக்குடன் தேக்க மரக்கன்றுகளின் நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாய பூர்வமாக தேக்கமரக்கன்றுகளை நட்டு நடுகையை...
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மக்களின் மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களின் பங்கு என்ன? என்பது தொடர்பாக பேஸ்புக் விரும்பிகள் ஆயிரத்து தொன்னுற்றைந்து பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. ஒவ்வொரு நாளும் தமது பேஸ்புக் பக்கத்தை தவறாது கவனித்து வரும், இந்த பயன்பாட்டாளர்களை இரு குழுவாக ஆராய்ச்சியாளர்கள் பிரித்தனர். இதில், ஒரு குழுவினருக்கு வழக்கம்போல தமது பேஸ்புக்...
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் போராளிகளாகவிருந்து உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் கொண்டாடுப்படும் நிலையில் தற்போது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மாவீரர் தின நிகழ்வுகளின் போது, யாழ். பல்கலைக்கழகத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டிருந்த இடையூறானது, தாழமுக்கமாக மாறியுள்ளது. இலங்கையில் இருந்து தென்கிழக்கு திசையில் இது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் மேகம் சூழ்ந்த மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நிகழும் மழையுடனான கூடிய மழை காரணமாக, நாட்டில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ராஜாங்கனை மற்றும் இரணைமடு...
என்னை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தக்க பதில் வழங்க தான் தயாராகிக்கொண்டு உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற போது அங்குள்ள வானொலி ஒன்றிற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சித் தலைமையிடம் கோரியுள்ளதாகவும், முதலமைச்சர் முன்னாள்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார். அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிரான்ஸில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 0033789238926 என்ற இலக்கத்தினூடாக...
தமது விடுதலையை வலியுறுத்திய தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7ஆவது நாளாகவும் தொடர்கின்றது. உண்ணாவிரதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட 20 இற்கும் மேற்பட்டோர் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டபோதும், அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையைப் புறக்கணித்துள்ளனர். இவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசின் சார்பில் எந்தவித உறுதியான நடவடிக்கையும் நேற்று மாலை வரை மேற்கொள்ளப்படவில்லை எனக்...
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக, வடமராட்சிப் பிரதேசத்தில் தற்போது வயிற்றோட்டம் பரவி வருவதாக, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கி மூலம் கிராமம் கிராமமாக அறிவித்தல்கள் விடப்பட்டு வருகின்றன. குடிநீர், உணவருந்துதல் மற்றும் மலசலகூடங்களை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பில் இந்த விழிப்புணர்வு...
பல அரசியல் காரணங்களுக்காக, அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகையில், அரசியல் கைதிகளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பினார். சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன் வால்கர் நிடெர்கூர்ன் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (13) விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரை அவரது...
தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களை நான் வைத்திருப்பதாக கூறுகின்றனர். அந்தக் கட்டடங்களை நீதிமன்றத்தின் ஊடாக கோரினால், அதனை நான் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஸ்ரீதர் திரையரங்கு எனது கட்சி அலுவலமாகவிருக்கின்றது. 1997ஆம் ஆண்டு நான் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த போது, வீரசிங்கம் மண்டபத்தை எனது கட்சி...
எனது மகன் காணாமல் போய்விட்டார் என்று எழுதப்பட்ட கடிதத்தை தருவதற்கு, கிராம அலுவலகர் பின்நிற்கின்றார். என்னை அவமானப்படுத்துகின்றார். என்னை எப்போதும் ஏளனமாகவே அவர் கதைக்கின்றார் என்று காணாமல் போனவரின் தாயார் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன், வியாழக்கிழமை (12) அமைதியான முறையில்...
ஊடகவியலாளர்களுக்காக கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 2500 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பான அனைத்து வேலைகளும் நிதியமைச்சினால் முன்னெடுக்ப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். வாராந்த...
Loading posts...
All posts loaded
No more posts
