- Saturday
- June 13th, 2026
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியான 4 சதவீதமான வரி, மின்சாரக் கட்டணத்துக்கு அறவிடப்படமாட்டாது என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். மின்சார பாவனையாளர்களுக்கு பாரமின்றி அவர்களுக்கு முறையாக மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல், அவற்றுக்குரிய அனுமதிப்பத்திரமின்றி அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தகைய செயல்களுக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரைக் கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண...
இலங்கை விமானப்படை தலைமையகத்தினால் யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. விமானப்படைத் தளபதியின் பணிப்பில் விமானப்படை சேவாலங்கா மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த புத்தகங்கள் யாழ் வசாவிளான் குட்டியபுலம் மகாவித்தியாலயம் மற்றும் புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நேற்று (30) குட்டியபுலம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற...
உலகளாவிய ரீதியில் அனைத்து நாட்டவர்களாலும் இன்று (01) உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உலக எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அவ்வகையில் இம்முறைக்கான கருப்பொருளாக "செயற்பாடுகளுக்கான நேரம் தற்பொழுது ஆரம்பம்" (The Time to Act...
மீனவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னார் - ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர் அறிமுகமான முதல் படம் இதுதான். மேலும், ராஜ்கிரண், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் வெளிந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை...
அண்மையில் இலங்கையின் வடபகுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேச மக்களுக்கு ஜேர்மனியில் உள்ள வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தினரால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது. அதன் இன்னொரு கட்டமாக வறணிப்பகுதியில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினருக்கு மேற்படி ஆலயத்தினரின் நிதி உதவியுடன் நிவாரண உதவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கடந்த...
இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் இருள் சூழ்ந்து காணப்படும் எனவும், இதன்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும்...
வடக்கு மாகாணத்தில் உள்ள புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா மற்றும் புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர்...
எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும் என சிறையில் உள்ள அரசியல் கைதியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். கொடிய யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்படாமல் பல துன்பங்களை அனுபவிப்பது மட்டுமன்றி அவர்களது குடும்பமும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகள்...
இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த 9 இராணுவ அதிகாரிகள் இரகசியமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் உள்ள இந்த 9 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமான...
இலன்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடார். 30 வயதான குறித்த தமிழர் 2012 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் கடல் வழியாக படகு மூலம் ஆஸ்ரேலியவிற்க்கு...
அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் மந்தகதிக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது என்று குறிப்பிட்ட அவர் அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்...
2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில், 11 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் வர்த்தமானி அறிவிப்பில், ஏழு பொருட்களின் பெயர் விவரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வரவு- செலவுத்திட்ட அறிக்கையின் பிரகாரம், பருப்பு, சமையல் எரிவாயு, நெத்தலி, கடலை, உருளைக்கிழங்கு, கட்டாக்...
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் நாளை முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவது தொடர்பில் மாகாண மட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்....
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, சிறப்பு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது. அவ்வாறான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, மேல் நீதிமன்ற ஆணையாளராக முன்னாள் நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 31 வருடங்கள் நீதிபதியாகச் சேவையாற்றிய ஐராங்கனி பெரேரா, இராணுவ வீராங்கனையான இனோகா...
நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்பைச் செலுத்தக்கூடிய வடக்கு, கிழக்கு மக்களை மீட்டெடுக்க விசேட திட்டம் தேவை. இவர்களின் பிரச்சினையை அவசர நிலைமையாகக் கருதி முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக விசேட கவனம் செலுத்தி தாமதமின்றி நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவேண்டும். இரு கட்சிகளும் இணைந்ததன் முக்கிய குறிக்கோளை அரசு மறந்துவிடக்கூடாது. இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க்...
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இருந்து 7 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேலும் 5 கிலோ கஞ்சாவுடன் ஐவரைக் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். யாழ். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு பஸ்ஸில் ஏறியுள்ளனர்....
வடமாராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச சபை தனியாக்கப்பட வேண்டுமென்றும், நல்லூர், சுன்னாகம், மானிப்பாய், சங்கானை, நெல்லியடி போன்ற பிரதேசங்கள் நகர சபைகளாக தரம் பிரிக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் 2016ம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
