- Sunday
- June 14th, 2026
வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில், சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தெரிவித்தார். வரணி படைமுகாமில் சித்திரவதை முகாம் காணப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த தனியார்...
வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றங்கள் காரணமாக நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (02) இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம்மழைவீழ்ச்சியினளவு 150...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட செந்தூரனினால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதத்தின் பிரதிகளை அச்சிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பாலேந்திரன் பிரசாத் என்ற இளைஞரே நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த (26) யாழ்....
நான்கு அல்லது ஐந்து வர்த்தகர்களை அல்ல நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களை கருத்தில் கொண்டே வவுச்சர் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான சீருடை நிமித்தம் வவுச்சர் வழங்கும் நிகழ்வு அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பல மாணவ, மாணவிகள் அவரது கையால் வவுச்சரைப்...
தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வு என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்கை வரை அனைத்து யோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தி இந்த இறுதித்...
இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த அளவு வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரவில்லை மறைந்து விட்டது. தற்போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், இலங்கை அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது, தென்மேற்காக மேலும் நகர்ந்து, தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளது. என...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகெலைச் சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதவான் எஸ்.லெனின்குமார் சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்....
வடமாகாண பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 5ஆம் திகதியே மூடப்படும் என வடமாகாண கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார். கடந்த 26ஆம் திகதி, கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன்...
வடமாகாண மரநடுகை மாதத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக மன்னார் மாவட்டத்தில் பழமரத் தோட்டங்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி மன்னார் தாமரைக்குளப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (30.11.2015) நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு பழமரக்கன்றுகளை வழங்கி வைத்ததோடு, அப்பகுதியில் புதிய முறையில் மாந்தோப்பு...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவோருக்கென விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் தளர்த்தப்பட்டுள்ளன. இதில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அமர்ந்திருப்பதற்கென ஆசனங்களும் கடந்த வாரம் முதல் ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடுவதற்கென வருவோர்கள் பாஸ் நடைமுறையின் படியே கடந்த சில வருடங்களாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதேபோல் பார்வையிட வருவோர் உள்ளே அனுமதிக்கப்படும் வரையில் வைத்தியசாலைக்கு...
யாழ். பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். யாழ்.நகரப் பகுதியில் இயங்கி வந்த உணவு விடுதி ஒன்றுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 31ஆம் திகதி 3 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்று 3 கிலோ நிறையுடைய சோஸ்...
மக்களின் போக்குவரத்து செயற்பாடுகளுக்கு ஏதுவாக எழுவைத்தீவு இறங்குதுறையை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மேற்படி இறங்குதுறை நெடுங்காலமாக பழுதடைந்துள்ள நிலையில் இதனூடாகப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாவதாக தீவகப் பகுதி அபிவிருத்தி தொடர்பில் நேற்றைய தினம்...
தமிழகம் – மதுரையில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் தங்களது உயருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மதுரை – ஆணையூரில் உள்ள ஈழ அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் அத்துமீறி நுழையும் குண்டர்கள் குழுவினரினால் தங்களுக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாக ஈழ அகதிகள் முறையிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி முகாமிலிருந்து தொழிலுக்காகச் சென்றுவரும்...
வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்குவது தொடர்பில், எந்தவித நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற காணி தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது வழங்கப்பட்டுள்ள காணிகள் கூட கடந்த அரசாங்கம் வழங்குவதற்கு சம்மதித்திருந்த காணிகளே...
அரசாங்கத்தின் முக்கிய எதிர்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தும் கைதிகளின் பொதுமன்னிப்பு விடயத்தில் கரிசனை கொள்ளாதது வேதனைக்குரிய விடயமாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:- அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினராலும்...
உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் வீட்டுக்குச் சென்றவர்கள், வீட்டிலிருந்த பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை பார்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தால், இரண்டு பெண்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சி கூடத்தில் செய்து பார்த்த உடற்பயிற்சியை, மதுபோதையில் வீட்டுக்குச் சென்று அங்குள்ள பெண்கள் மீது அதனைச்செய்து பார்த்தமையாலேயே...
மாவீரர் தினமான கடந்த 27ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண ஊழியர்கள் இருவர், விளக்கேற்றியமை தொடர்பில் அந்த இரு ஊழியர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி இரண்டு ஊழியர்களும், யாழ்ப்பாண வளாகத்துக்குள் விளக்கேற்றியதாக கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது சகோதரர்கள் உயிர்நீர்த்ததாகவும் அதனால் தான் விளக்கேற்றியதாகவும் அதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும்...
யாழ்ப்பாணத்துக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. 1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கத்தரிக்காய் 1...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியத் திட்டமொன்றை தனியார்துறை ஊழியர்களுக்கும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் விரைவில் எடுக்குமென, வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். பலர், அரசாங்கத் துறையில் பணியாற்ற விரும்புவதற்கு, அங்கு காணப்படும் ஓய்வூதியத் திட்டமே...
தனியார் பஸ் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைக் கட்டணம், அதிகரிக்கப்பட்ட வரிப்பணம் மற்றும் புதிய வரி முறைமை ஆகியவற்றை இரத்துச் செய்யாவிடின், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், தனியார் பஸ் கட்டணத்தை 6 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக, தனியார் பஸ் சங்கங்கள் அறிவித்துள்ளன. பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு எழுத்தியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன....
Loading posts...
All posts loaded
No more posts
