- Thursday
- August 6th, 2026
எந்த வகை இரத்தமானாலும் மிதிபடுவது சேர்ந்தே நித்தம்' எனக் குறிப்பிடப்பட்டு சுவரொட்டியொன்று யாழில் ஒட்டப்பட்டுள்ளது. சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் என்ற விபரம் அதில் குறிப்பிடப்படவில்லை.
வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் 'ஆரோக்கியத்துக்கான நடைப்பயணம்' எனும் தொனிப்பொருளிலான ஊர்வலம், யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது. தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த ஊர்வலம், வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் வரை...
இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு, குழந்தைகளுக்கான பால்மாவினைக் கூட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக, குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனரென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிகிச்சையளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து பின்னர்...
"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை நான் தாரைவார்க்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை பறித்தெடுத்தனர்'' என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் நேற்று நடைபெற்றது. பஸில் ராஜபக்ஷ,...
பாடசாலைக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுத்து ஒரு கற்ற பரம்பரையை நாட்டுக்கு வழங்கி சர்வதேசத்தை வெற்றி கொள்வதற்கு ஏற்றவகையில் பிள்ளைகளைத் தயார்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்து பாடசாலை முறைமையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மின்னேரிய...
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறியும் அமர்வு இன்று (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக யாழ் மாவட்டத்திற்கான...
வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஷ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடையிலான சந்திப்பொன்று இன்று (15) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் முதலமைச்சருடன் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளமை...
இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு தான் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். முன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட்...
புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்கொட்லாந்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில்...
மற்றவர் வளர்ச்சி கண்டு மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (12.02.2016) இடம்பெற்ற வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு உரையாற்றும்போது, வெற்றி தோல்விகளைச்...
மாவீரர்களை நினைவு கூரும் உரிமையை வழங்க வேண்டும் என புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் அமர்வில் கருத்துகளை முன்வைக்கும் போது முல்லைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். “தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழமே சரியான தீர்வு. தமிழீழமா சமஸ்டியா என்னும் கேள்வியுடன் தொடர்ந்தும் காலத்தை வீணாக்கி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருப்பதை விடுத்து, வடக்கையும் கிழக்கையும் நிர்வகிக்கக்...
நாமல் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக, பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது. தாஜுடீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதம் வேகமாக பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை நேற்று பான் கீ மூன் வெளியிட்டார். குறித்த அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளின்...
மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் நேற்று கடற்படையினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட இருவரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏ.யூட்சன் டெரன்சியன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். குறித்த மீனவர்கள் 4...
சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்களுக்கு தொடர்புள்ளதாக என்பது பற்றி விசாரிப்பதற்காக இந்திய பொலிஸ் அதிகாரிகள், இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐதராபாத் பொலிஸார் இங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை - இந்தியாவுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்கள் இருவருக்கு தொடர்புள்ளதாக...
வடக்கு, கிழக்கில் காணாமல்போகச் செய்யப்பட்டோர் மற்றும் நாட்டில் இரகசிய முகாம்கள் எங்கு இருக்கின்றன என்பது தொடர்பில் அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். அத்துடன், காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என யாழில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிஙக் தெரிவித்த...
காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் முறைமை ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அத்துடன், இலங்கைச் சட்டத்திலும் இதற்கு இடமில்லை. அதற்கான அதிகாரமும் அரசுக்கு இல்லை. அதனால் மேற்படி தரப்பினருக்கு 'மரணச் சான்றிதழ்' வழங்குவதற்குப் பதிலாக 'காணாமல் போனோர் சான்றிதழ்' இன்னும் இரு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன சபையில் தெரிவித்தார்....
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய விசரணை நடவடிக்கைகளில் எந்தவொரு விடயத்தையும் வற்புறுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் அல் ஹுஸைன் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகளை விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர்...
நாட்டில் முன்னிருந்த அரசியல் தலைவர்கள் மின்சாரக் கதிரைக்கு செல்வதில் இருந்து விடுபட்டமைக்கு காரணம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனாலேயே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் மின்சாரக் கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அன்றிருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டிருந்த போதும் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற...
வீதி சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக நாடு பூராகவும் பிரதான நகரங்களில் உள்ள தபால் காரியாலங்களை இரவு 8 மணி வரைக்கும் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தபாலகங்களை திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...
Loading posts...
All posts loaded
No more posts
