7 தற்கொலை குண்டுதாரிகள் கைது!

அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த ஏழ்வரும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் உயிர்த்த்...

தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மோதல்: 5 பேர் அதிரடியாக கைது

மாத்தளையில் பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் அந்தப் பகுதி முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வரகாமுர பிரதேசத்திலுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் ஆயுத முனையில் கொள்ளை!

குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகிறார்கள். ஆனால் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி மூன்று இடங்களில் நேற்று திங்கட்கிழமை ஆயுதமுனையில் வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை-புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி பகுதியில் மூன்று வீடுகளில் 27 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பன ஆயுத முனையில்...

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விக்னேஸ்வரன் பதவியிலிருந்து இடைநிறுத்தம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 30ம் திகதியிடப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைவாக  ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  இந்த பதவி இடைநிறுத்தம் வழங்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி...

உடுவில் பிரதேசபையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அச்சுறுத்தல்..! தேடுதல் தீவிரம்!!

யாழ்.உடுவில் பிரதேசசபையில் குண்டுவைக்க உள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம் நிறுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பிரதேசசபைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, உடுவில் பிரதேசசபையில் அபிவிருத்தி தொடா்பாக விசேட கூட்டம்...

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் உயிரிழப்பு: புத்தளத்தில் தொடர்ந்தும் பதற்றம்

புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிலாபம், முகுனுவட்டன பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் பிரசன்ன (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாரவில நகரத்தில் பொலிஸார் சோதனை...

தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லை!!! – பரபரப்பு தகவல் வெளியானது

ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகம் புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது . அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர...

யாழில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூவரும் மாணவர்களை பிணையில்...

மருத்துவ பீடத்தில் ஜொனி மிதிவெடி, கிளைமோர் மீட்பு!!

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மீட்கப்பட்டவை போலி மிதிவெடி மற்றும் கிளைமோர் என பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை கண்காட்சிக்காகச் செய்யப்பட்டவையாக இருக்கலாம்” என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இன்று இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதில் மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப்...

யாழ்.பல்கலை. மாணவர்கள் இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்....

யாழ்.பல்கலை சுற்றிவளைப்பு: மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் விசாரணையில் !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் போராளிகள் படங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதையடுத்தே அவர்கள் இருவரும்...

இரும்பு தொழிற்சாலையில் வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிப்பு

ஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இரும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடற்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் குண்டுகளை செயலிழக்கச் செய்யும்...

ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு?

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது அங்கு தீவிர தேடுதல் இடம்பெற்று வருகின்றது. இன்று (வியாழக்கிழமை) காலை அங்குள்ள மலசலகூடத்தில் மர்ம பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார், இராணுவம் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டு...

யாழ். குருநகரில் சுற்றிவளைப்பு தேடுதல்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முப்படையினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 51ஆவது படைப்பிரிவு இராணுவம், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிமுதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியாக பயங்கரவாதிகள் உள்நுழையலாம் என்ற...

அல்லைப் பிட்டியில் மதஸ்தலம் ஒன்றில் இருந்து இராணுவ சீருடையும், துப்பாக்கி தோட்டாக்களும் மீட்பு!!

யாழ்ப்பாணம் அல்லைப் பிட்டியில் மதஸ்தலம் ஒன்றில் இருந்து இராணுவ சீருடையும், துப்பாக்கி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று காவற்துறை விசேட அதிடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டன. இதுதொடர்பில் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், மன்னார் எரிக்கலம்பிட்டி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 12 பேர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்...

50 விகாரைகளில் தற்கொலை தாக்குதல்கள் நடத்தத் திட்டம் – ஞானசார தேரர் எச்சரிக்கை

வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தன்னை சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்....

இது முடிவல்ல’ IS அமைப்பு எச்சரிக்கை!

எதிர்வரும் காலங்களில், உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்று, இஸ்லாமிய இராச்சியம் எனும் பெயரில் இயங்கும் ​ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத்...

இராணுவத்தின் முற்றுகைக்குள் வடமராட்சி!

யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் சுற்றிவளைப்பு தொடந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும்...

கல்முனையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!! இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் காயத்துடன் தப்பி ஓட்டம்!!

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் முக்கிய பகுதியாக சாய்ந்தமருது வீடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாய்ந்தமருது...

சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்பு!

துப்பாக்கி மோதல் பதிவாகி இருந்த கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப்பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை...
Loading posts...

All posts loaded

No more posts