- Tuesday
- December 23rd, 2025
அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை 7.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் உள்ள வொலிவேரியன் என்னும் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த படையினர் மீது குண்டுத் தாக்குதல் மற்றும்...
கொம்பனித்தெரு-பள்ளிவீதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழ் இருந்தே, குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில், மதகுருவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படைத்தரப்புப் புலனாய்வுத்துறையை, தற்போதைய அரசாங்கம் பலவீனமாக்கியுள்ளது என்றும் அதுவே, தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமெனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும், இவ்வாறான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கலாமெனச் சந்தேகம் வெளியிட்டார். ஊடகப் பிரதானிகளுடனான ஊடகச் சந்திப்பொன்று, ஜனாதிபதி தலைமையில், இன்று (26) காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு...
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட சஹரான் ஹாசிம் என்ற மௌலவி இறந்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். ஷங்ரிலா நட்சத்திர விடுதி தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், அதனை உறுதிப்படுத்துவதற்கு...
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்றையதினம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று (26) முதல் 28 ஆம் திகதி வரை) வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், சன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை இவ்வார இறுதியில் (Weekends) தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. அத்துடன்வெளிநாட்டவர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. Security Alert: U.S....
யாழ். இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே இந்த சோதணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது....
இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, அவ்வமைப்பின் அமாக் செய்திப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் அபு உபைதா, அபுல்பார மற்றும் அபுல் முக்தார் ஆகிய மூவரின் புகைப்படங்களும்...
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு இரண்டாவது தாக்குதல்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வு இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இந்த தகவலை இந்திய புலனாய்வு நிறுவனத்தின் (NITE) மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி இந்திய ஆங்கில ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட...
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பினர், குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் 7 பேருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.
வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,...
நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த...
பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகள் மாத்திரம், இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது...
மொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு இலங்கையில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே புலனாய்வு பிரிவு அறிவுறுத்தி இருந்தது என்ற தகவலை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த அச்சுறுத்தல் குறித்த ஆவணங்கள் உண்மை என அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு தாக்குதல்...
தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வு கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நேபாளத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். தென்னாசிய பிராந்தியத்தில்...
இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்கள் நேற்று (சனிக்கிழமை) இரவு 9.04 மணியளவில் இந்து சமுத்திரத்தின் மொஹென் பகுதியை அண்மித்த இடங்களில் பதிவாகியுள்ளன. 5.3 மற்றும் 4.9 ரிக்டர் அளவுகளில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் குறித்து இதுவரை வேறு எந்தவிதமான...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது. ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில்...
தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் தகுதியும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா...
2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆளும்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிர்க் கட்சியான மஹிந்த ஆதரவு...
Loading posts...
All posts loaded
No more posts
