Ad Widget

நல்லூர் கோவிலை தாக்­கு­வ­தற்கு திட்­டமாம்?

யாழ். நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தில் நாளை சனிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தப்­போ­வ­தாக அநா­ம­தேயக் கடி­தத்தை அனுப்­பி­ வைத்­தவர் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அவரைக் கைது செய்­யு­மாறு வடக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன் பொலி­ஸா­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

தமிழர் தாய­கத்தில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நாளை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் இந்த அநா­ம­தேயக் கடிதம் ஆளு­நரின் அலு­வ­ல­கத்­துக்குக் கிடைத்­துள்­ளது.

நல்லூர் ஆல­யத்தில் 18 ஆம் திகதி எனது கண­வரும் வேறு சிலரும் குண்டுத் தாக்­குதல் நடத்த உள்­ளனர் என்று பேனாவால் எழு­தப்­பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளு­நரின் அலு­வ­ல­கத்­துக்கு நேற்று கிடைத்­தது.

அதனைப் பார்­வை­யிட்ட ஆளு­நரின் பிரத்­தி­யேக அலு­வ­லகர். அதனை ஆளு­நரின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வந்தார்.

கடிதம் தொடர்பில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருடன் தொலை­பே­சியில் உரை­யா­டிய ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன், அதனை எழு­தி­யவர் குறித்தும், எங்­கி­ருந்து அனுப்­பப்­பட்­டது போன்ற விட­யங்கள் தொடர்­பிலும் விரி­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க அறி­வு­றுத்­தினார்.

ஆளு­நரின் அறி­வு­றுத்­தலை உடன் நடை­மு­றைப்­ப­டுத்த யாழ்ப்­பாணம் தலை­மை­யக பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியைப் பணித்த வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஆல­யத்தின் பாது­காப்பை அதி­க­ரிக்­கவும் அறி­வு­றுத்­தினார்.

இத­னை­ய­டுத்து அநா­ம­தேயக் கடிதம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள பொலிஸார், நேற்று நண்­பகல் தொடக்கம் நல்லூர் ஆலய சூழலின் பாது­காப்பை அதி­க­ரித்­துள்­ளனர். இரா­ணு­வத்­தி­னரும் பாது­காப்பில் ஈடு­பட்­டுள்­ளனர்.

வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க நல்­லூரில் நாளை சனிக்­கி­ழமை வைகாசி விசாக உற்­சவம் இடம்­பெ­று­கி­றது.

இதே­வேளை, இறுதிப் போரில் கொல்­லப்­பட்ட உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நாளை சனிக்கிழமை தமிழ் மக்கள் முன்னெடுக்க உள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts