- Saturday
- August 1st, 2026
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையில் பரமேஸ்வரா ஆலய முன்றலில் தீபம் ஏற்றி வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டிருந்ததாக அறியமுடிகின்றது.
முன்னைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது எமக்கு தெரியவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக, சில அரசியல் கைதிகளை 10 லட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என வடக்கு...
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் நேற்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன், சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்ட இந்த உரிமையை இராணுவமும், பொலிஸாரும் தடுக்க முயற்சிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின்...
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர் உரிமைக்காகக் களமாடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக, மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி...
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று என்ற...
"தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு" "ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்" என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி...
"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகும். எனவே, பொது இடங்களில் மரணித்த புலிகளை நினைவுகூருவது, புலிகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டத்துக்கு எதிரானதாகும். இது தொடர்பில் பொலிஸார் அவதானத்துடன் இருக்கின்றனர். சட்டத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' - இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். "வடக்கு, கிழக்குப்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்று 61 ஆவது பிறந்தநாள். இந்நிலையில், அவரை வாழ்த்தி வடக்கின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிரித்த முகத்துடன் பிரபாகரனின் உருவப்படம் காணப்படும் இந்தச் சுவரொட்டிகளில், 'தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்க!', 'தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தலைவர் வாழ்க!!' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தமிழீழ...
தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2,218 சிங்களவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இவர்களுக்கு பாகுபாடின்றி அரச சேவை வழங்கப்படுகின்றது என்றும் கூறிய அவர், சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல...
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என அமெரிக்க உயரதிகாரி சமந்தா பவர் உறுதியளித்தார் என சம்பந்தன் தெரிவித்தார். ஐ நாவுக்கான அமெரிக்காவின் நிரந்திரப் பிரதிநிதி சமந்தா பவர், இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்தரப்பினரை சந்தித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமந்தா பவரை சந்தித்து பேசினர். அச்சந்திப்பில் போருக்கு பின்னரான...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் பொறிமுறையின் கீழ் முதற்கட்ட குழுவினர் தொடர்பாக சட்டமா அதிபர் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவினரில் உள்ளடங்குவோர் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு சிறிய தண்டனைக் காலம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்தே புனர்வாழ்வுக்குச் செல்ல முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு பல வழக்குகள் காணப்படுகின்றமையால்...
'நாகதீப' என்ற பெயரை 'நயினாதீவு' என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. - இப்படித் 'திவயின' சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். நயினாதீவின் சில பகுதிகள்...
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட பல அமைப்புக்கள் மீது விதித்திருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. ஆனாலும், தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, மற்றும் ஏனைய சில அமைப்புகள் மீதான தடை தொடரும் என வெள்ளிக்கிழமை இரவு அரசு வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்...
எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த...
யாழ்ப்பாணத்தில் நாகதீபு என்ற பெயரை, நயினாதீவு என்று பெயர்மாற்றம் செய்தால், கண்ணில் தென்படுகின்ற அனைத்து தமிழ் வீதிகளின் பெயர்ப் பலகைகளையும் இலங்கையில் எப்பகுதியில் இருந்தாலும் சரி, தகர்த்தெறிவோம் என்று ராவணபலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பௌத்தர்களின் புனித தீவான யாழ்ப்பாணம், நாகதீப என்ற பெயரை நயீனாதீவு என்று பெயர் மாற்றம்...
இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இந்தியக் கடற்பரப்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகொன்றில் பயணம்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கருத்து முரண்பாடுகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதை கைவிட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அவற்றை நியாயப்படுத்தியும் உள்நாட்டு மற்றும்...
திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு கடற்படையின் இரகசியத் தடுப்பு முகாம் என்று சொல்லப்பட்ட நிலையத்துக்கும் சென்றோம். அங்கிருந்த சுவர்களில் எழுதப்பட்டிருப்பதை வைத்து பார்க்கின்ற போது, அங்கு பல பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள்...
Loading posts...
All posts loaded
No more posts
