- Saturday
- August 1st, 2026
இறுதிப்போரின்போது செல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நந்திக்கடலில் மிதந்தபோது, எனது மகள் உயிருடன் வருவாள் என அங்கேயே காத்திருந்தேன் என்று மகளைப் பறிகொடுத்த தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார். வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிவபாதம் செல்வராணி என்ற தாயார் இவ்வாறு சாட்சியமளித்தார். குறித்த...
பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் இந்திய அறிவுரையின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பான சாத்தியவள கண்காணிப்புப் பணிகளுக்கு அண்மையில் இந்தியாவின் சார்பில் சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி தியான் சாஸ்திரி தலைமையிலான குழுவினர் வருகை தந்திருந்தனர். இக்குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பிரகாரம் பலாலி...
இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத விதத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்து. அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 150.15 ரூபாவாக இன்று பதிவாகியிருக்கிறது. டொலருக்கு எதிராக 148 ரூபாவை தாண்டியது இதுவே முதல் தடவையாகும். இலங்கை ரூபாவின் இந்த வீழ்ச்சி பொருளாதாரத்தில் பெரும்...
சம்பூரில் இந்திய உதவியுடன் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்திற்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் வலுத்து வருகின்றது. அனல் மின் நிலையத்தின் தாக்கம் பற்றி நேரில் அறிந்து கொள்வதற்காக ஏற்கனவே அனல் மின் நிலையம் அமைந்துள்ள புத்தளம் மாவட்டம் நுரைச்சோலைக்கு மூதூர் கிழக்கு பிரதேச சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று திங்கட்கிழமை அங்கு சென்று திரும்பியுள்ளது....
அழகிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்றுவது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்கையில் அமையப்போகின்றது. முழு உலகமே அனல் மின் நிலையத்திட்டத்தை கைவிடுகையில் இலங்கை மாத்திரம் அதனை ஆதரிப்பதையிட்டு சர்வதேசம் வியப்படைந்துள்ளது. எவ்வாறாயினும் உத்தேச அனல் மின் நிலையத் திட்டம் இந்தியாவிற்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்து இலங்கை மக்களுக்கும் இயற்கைக்கும்...
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று யுத்த ரீதியில் எல்.ரீ.ரீ.ஈ, தோற்கடிக்கப்பட்டாலும், எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்வி கண்டபோதும், யுத்தக் களத்திலிருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும் ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை.எல்.ரீ.ரீ.ஈ-இன் தனி ஈழத்துக்கான கருத்து என்பது, துப்பாக்கிகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத...
இறுதிக்கட்டபோரின் பின் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லமும் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த துயிலுமில்ல வளாகத்தில் தினமும் இராணுவத்தினர் காலையில் இராணுவ அணிவகுப்பு செய்கின்றனர். மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் இவற்றை தினமும் பார்த்து மனவேதனை அடைவதை அவதானிக்க முடிகின்றது. உலவியல் ரீதியாக அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இராணுவத்தினரின் இச்செயற்பாடு மக்களிடமிருந்து அவர்களை...
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கடந்த...
சம்பூர் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படின் அதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். எனவே இது தொடர்பில் எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் அளவுக்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படை முகாம் இருந்த 177...
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது நிலத்தைத் மீட்டுத் தருமாறு கேப்பாப்புலவு மக்கள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கேப்பாப்புலவு பிள்ளையார் கோயில் முன்றலில் அக்கிராமவாசியான கணேசபிள்ளை என்பவர் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். அவரது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அக்கிராமத்தினைச் சேர்ந்த அனைத்து மக்களும் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனையை ஜனாதிபதியும் பாதுகாப்பும் அமைச்சும் கருத்தில் கொண்டு...
வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் சுமார் 3700ற்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீள் கையளிக்க முடியாத தேசிய பாதுகாப்பின் மர்மஸ்தானங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு அதி கூடிய விலை கொடுக்க...
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் சாட்சியங்கள் இரண்டாவது கண்காட்சி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கடந்த 6 தசாப்தங்களுக்கு முன்னால் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய...
தற்போது நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாம் எனவும் இக்காலநிலையானது இன்னு சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் காலநிலை மத்திய ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பகல் பொழுதுகளில் நீங்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என எண்ணினால் அதற்கு வெப்பதிலிருந்து பாதுகாப்புத் தேவை என மருத்துவ அதிகாரி லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வெப்பமானது குழந்தைகளின் இதயம்...
நேற்று காலை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஸிகா வைரஸ் பரிசோதனை செய்யும் திட்டத்தினை சுகாதார அமைச்சர் வைத்தியர் பாலித மஹிபால அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஆரம்பித்துவைத்தார். குறிப்பாக தென் அமெரிக்காவில் ஸிகா வைரஸ் பரவிவருவதுடன் அங்கு பெரும் நெருக்கடிநிலை நிலவி வருகின்றது. இதனையடுத்து அங்கிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் ஸிகா வைரஸ் தொற்றுக்கு...
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்ட 18வயதுடைய இளம்பெண் ஒருவர் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தனியார் வகுப்பு முடிந்து வீடு திரும்புவற்காக சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த வேளை மோட்டார் சைக்கிளில் முகம் புலப்படாதவாறு தலைக்கவசத்தை முழுமையாக அணிந்து...
இலங்கையில் இடம்பெற்ற போரின் போதான சம்பவங்கள் குறித்து நம்பத்தகுந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நாவின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத விடயம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ - மூனின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள்...
யாரை கொலை செய்தாவது போரை முடி என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். என்னையும் மீறி கனிஷ்ட நிலை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கட்டளையிட்டார். இதனால் தான் போர் குற்றப் பிரச்சினைகளும் வெள்ளைக் கொடி விவகாரமும் ஏற்பட்டது. என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு நாளிதழுக்கு வழங்கிய விசசேட செவ்வியில் அவர்...
450 கிராம் பாணின் விலையை நான்கு ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முழுமையாக்குமெனவும், அதன் பின்னர் அரசாங்கத்திற்கு கையளிக்கும் எனவும் பேரவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த விடயம்...
"நாம் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அதனடிப்படையில், தமிழீழம் கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. அதனடிப்படையிலேயே ஒரு காலத்தில் நாம் தனித் தமிழீழத்தைக் கேட்டோம். இன்று ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வைக் கேட்டதும் தமிழ் மக்களே. அதிகாரப் பகிர்வை பெரும்பான்மை மக்களும் கேட்கவில்லை முஸ்லிம் மக்களும் கேட்கவில்லை....
Loading posts...
All posts loaded
No more posts
