- Sunday
- July 27th, 2025

கிராம சேவையாளர்களை அவர்களது கடமையை மேற்கொள்ளவிடாது இடையூறு விளைவித்த இராணுவத்தினரைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட கிராம சேவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கிராம சேவையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கில், தென்னிலங்கை மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் வாடிகள் அமைத்து தொழில் நடவடிக்கையில்...

மத்திய அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை முட்டுக்கட்டையாக செயற்படுகிறது என்று சிறைச்சாலை மறு சீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு 65,000 வீடுகளை அமைப்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு...

நாரஹேன்பிட்டியில் கூரியர் நிறுவன தலைமையகம் ஒன்றில் மீட்கப்பட்ட புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பி தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. லண்டனுக்கு அனுப்பப்பட இருந்த குறித்த தொப்பி விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டு அம்மானினால் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் சில தகவல்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனை உறுதி...

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய...

யாழில் சுவீகரிக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிக்காது தடுத்து நிறுத்துமாறு வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் யாழ். அரசாங்க அதிபர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். யாழ். ஆணைக்கோட்டை, கூழாவடி இராணுவ முகாம் பகுதியிலுள்ள ஐந்து தனிநபர்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு காணிகளை இன்று திங்கட்கிழமை நில அளவையாளர்கள் அளப்பதற்கு முற்பட்டனர். இந்தநிலையில்,...

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வு திட்டம் இன்று ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார். இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அச்சு பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

யாழ்ப்பாணம் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 36 ஏக்கர் காணி கடற்படையினரால் இன்று சனிிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – சேந்தாங்குளத்திலுள்ள ஆலயத்திற்கு சொந்தமான குறித்த ஏக்கர் காணிகள் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தநிலையில், கத்தோலிக்க மக்கள் மற்றும் குருக்களின் எதிர்ப்பினால் குறித்த காணி விடுவிக்கப்பட்டதாக அருட்தந்தை ஜெ.ஏ.அருள்தாஸன் தெரிவித்தார். குறித்த காணியை...

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பதற்கான ஆயுதக் கிளர்ச்சிகள் மீண்டும் தலைதூக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகாவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும்...

தென்மராட்சி – வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி மத்தியகல்லூரிக்கு அருகிலுள்ள வீதியூடாக குறித்த நால்வரும் பணித்துக்கொண்டிருக்கையில் இடைமறித்த குழு ஒன்று அவர்களை வாள்களால் வெட்டியதுடன் இரும்புக் கம்பிகளாலும் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

புதிய அரசின் மீது வடக்கு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது குறைந்து கொண்டு போகிறது என யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் அங்கத்தவர்காளான 9 பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட்...

யாழ்ப்பாணத்தில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் காணியும், ஆனைக்கோட்டை பகுதியில் 16 பரப்பு காணியும் படையினரின்...

யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான...

சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி,...

தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார். நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன....

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் ஒட்டகப்புலம், வறுத்தலைவிளான் பிரதேசங்களை முழுமையாகவும் காங்கேசன்துறையில் சில பகுதிகளையும் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விடுவிக்க இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளை விடுவிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பணிகள் முடிவடைந்ததும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் கடந்த வாரம்...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும், மீண்டும் தலைதூக்காது. தமிழ் மக்கள், ஒருபோதும் மீண்டுமொரு யுத்தத்துக்குள் தள்ளப்பட மாட்டார்கள். தெற்கைச் சேர்ந்த சில அரசியல் சக்திகளுக்கே, யுத்தமொன்றின் தேவை அவசியமாகியுள்ளது' என்று வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கடந்த...

பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், மீளாய்வின் பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது. இதன்போது பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புக்கள் வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில்...

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International...

ஆனைக்கோட்டை கூழாவடியில் தனியாருக்குச் சொந்தமான 16 பரப்புக் காணியை இராணுவ முகாம் அமைப்பதற்காகச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அந்தக் காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை வருகை தரவுள்ளதாகக் காணி உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மாகாண முதலமைச்சர்...

வட மாகாணசபை அமைச்சர்கள் அனைவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரும் மனுவில், இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் 4 அமைச்சர்கள் நீங்கலாக மொத்தம் 24 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளரும், வடமாகாண சபை பிரதி...

All posts loaded
No more posts