Ad Widget

65,000 வீட்டுத்திட்டம் தொடர்பில் சுவாமிநாதன் விளக்கம்!

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருக்கும் வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் விளக்கமளித்தார்.

அவர் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் தெரிவிக்கையில்,

சூழல் வெப்பநிலையை விட, வீட்டிற்குள் நிலவும் வெப்பமானது 3 தொடக்கம் 5 பாகை செல்சியஸ் குறைவாகவே காணப்படும்.

இந்த வீடானது 60 தொடக்கம் 70 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கக்கூடியது. இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 30ஆண்டுகளுக்குள் ஏதாவது தவறுகள் நடைபெற்றால் அதனை அந்த நிறுவனமே தம்முடைய செலவில் அதனை திருத்தித் தருவதாக எழுத்துமூலம் உத்தரவாதம் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எத்தனையோ விதமான சலுகைகளையெல்லாம் தாம் கொடுத்து இந்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்கும்போது இதனை பல அரசியல்வாதிகளும் வேறு சிலரும் தடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதைவிட இந்த ஒப்பந்தம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என நினைப்பவர்களே இதனைக் குழப்புகின்றார்கள் எனவும் குற்றம்சாட்டிய அமைச்சர் அவர்களை இந்த வீட்டுத்திட்டத்தைக் குழப்பவேண்டாமென்று தான் அவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் சில நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு தான் இன்னும் இரண்டொருநாளில் பதில் அனுப்பி வைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பந்தன் ஐயா தெரிவித்திருப்பதுபோல் இந்த வீடுகள் 10வருடம் மாத்திரம்தான் நிலைத்திருக்கும் எனச் சொல்வது தவறு எனவும், இந்த வீட்டிற்காக 89,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts