- Sunday
- August 17th, 2025

வடக்கில் இயங்கும் "ஆவா" எனப்படும் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு அமையவே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் குறித்த குழுவை கட்டியெழுப்பிய பிரிகேடியரை தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க...

யாழ் பல்கலைக்கழகத்தின் இரு கலைத்துறை மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து பீடங்களின் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.றஜீவன் தெரிவித்தார். எவ்வாறாயினும் ஒரு மாத காலத்தில் நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் பேராட்டத்தை ஆரம்பிப்பதாக அவர் கூறினார். கடந்த மாதம்...

தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மன்னார்வளைகுடா சின்னப்பாலம் கடல் பகுதியில் நேற்று திடீரென சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது. இதனால் கரையில் நிறுத்தபட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தது. கடந்த சில நாட்களாக மன்னார்வளைகுடா கடல்பிராந்தியத்தில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துவந்தது...

ஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்கள். அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விவரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று புதன்கிழமை (02) முதல் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார்...

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் வடக்கில் நிலைகொண்டுள்ள ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரும் வெளியேற்றப்படவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவிடம் எடுத்துரைத்துள்ளர். சிறீலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை வழங்குவது தொடர்பாக ஆராய கொழும்பு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சரை கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை...

யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ”ஆவா கெங்ஸ்டர்” உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனும், ஆசிரியரும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் இரு வாள்களுடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நவம்பர் 2 ஆம் திகதி...

பலாலி வீதி யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சிறு உணவகம் ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். திங்கட்கிழமை (31) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முகங்களிற்கு கறுப்புத் துணியால் கட்டியவாறு ஒரு மோட்டார் சைக்களில் வந்ததாகக் கூறப்படும் மூன்று நபர்களே குறித்த கடைக்குள் புகுந்து...

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், கொலையுடன் தொடர்புடைய வழக்கு, விசேட ஜுரி சபையின் முன்னால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நவம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த வழக்கு விசேட ஜுரி சபையின் முன்னிலையில் விசாரிக்கப்படும் என கொழும்பு உயர்நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது...

யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீரகேசரி பத்திரிகையின் அலுவலகம் மீது, இன்று திங்கட்கிழமை (31) காலை போத்தல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிர்வாகத்தால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராவின் பதிவின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை கையளிக்கவுள்ளதுடன் வலிவடக்கில் மேலதிகமாக 460ஏக்கர் காணிகளையும் பொதுமக்களிடம் மீள வழங்கவுள்ளார். கடந்த 26வருடங்களுக்கு முன்னர் வலிவடக்கு பகுதியில் இருந்து குடாநாட்டில் அப்போது காணப்பட்ட அசாதாரண நிலமையினால் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இவ்வாறான...

அகதிகளின் வருகையைத் தடுக்கும் முகமாக அவுஸ்திரேலியாவுக்குள் கடல்வழி மூலமாக நுழையும் மக்களுக்கு, அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த அறிவிப்பினை அவுஸ்திரேலியப் பிரதமர் மார்க்கம் டர்ன்புல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின்படி கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகள் அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்....

நாளைக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மைத்திரிபாலசிறிசேன, பலாலி இராணுவ கொன்டோன்மன்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் பிரதேசத்தினை மக்களிடம் கையளிப்பது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளார். பலாலி விமான ஓடுபாதைக்கு மேற்காக உள்ள பொதுமக்களின் காணிகளே நாளை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்படவுள்ள குறித்த...

யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு பிரபாகரன் படை என்ற பெயரில் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாண நகரத்தின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும்...

அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி கட்டணத்தில் மூன்றில் ஒரு பகுதி வற் வரியாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றுக்காக தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்துபவர்களின் கட்டணத்திலேயே இவ்வாறு கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு வரிகளுக்கும்...

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரிய விசனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழ் மக்கள் வாழும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையிலேயே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பாறையிலிருந்து பௌத்த மதகுருமார்களுடன்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பயணம் செய்யவுள்ளார். கீரிமலைப் பிரதேசத்தில் வீடற்றோருக்கு புதிய வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் குறித்த வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை...

வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணத்தில் நிர்வாகம் முழுமையாக சீர்குழைந்துள்ளது. விடுதலை புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றனர். எனவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உண்மைகளை மூடி மறைத்து விட்டு பாதுகாப்பு படைகளை முகாமிற்குள் அரசாங்கம் முடக்கி விட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை...

1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான...

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புவதாகத்...

All posts loaded
No more posts