- Saturday
- August 23rd, 2025

தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடன் ரத்துச் செய்ய வேண்டும் என்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி ஒருவர் அவரை சந்திப்பதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் நடைமுறையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த...

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். வவுனியாவிலுள்ள முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பேரணியாக சென்று வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட...

கிளிநொச்சி - உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு...

கிளிநொச்சி – உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்கள் 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது....

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராடப்போவதாக அறிவித்துள்ள அச்சங்கத்தினர் அது தொடர்பான கடிதத்தினை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த உணவுத்...

பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி அச்சம் எழுந்துள்ளது. புவியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவின்...

வட மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வரட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள கிராமங்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் வரட்சியானல் பெருமளவு விவசாயம் அழிவடைந்துள்ளதுடன், பல கிராமங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த...

தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராக இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகளின் கட்சி செயலாளர் இரா. கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலைய மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த கால...

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி...

இறக்குமதி செய்யப்படும் அரிசியை எக்காரணங் கொண்டும் 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விரும்பிபடி அரிசி விலையை அதிகரித்து பொதுமக்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க...

இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சைய்த் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களின் நிலையானதாக முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் எதிர்பார்ப்பாகும் என்று அவர்...

தமிழ் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை, அவர்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வினை ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ள எதிக்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தீர்வு விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவினை எடுக்கமுடியாது என்றும் இதனை தமிழ் மக்கள் மிகவும் கவனமாக சிந்திக்கவேண்டும் எனவும்...

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை நாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர்...

ஐநாவில் சிறீலங்கா தொடர்பான விவாதத்தை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிற்போடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் சிறீலங்கா அரசாங்கம் ஐநாவைக் கோரியுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் சமஸ்டி ஆட்சி எமக்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லையெனவும், ஒற்றையாட்சியின் கீழே தீர்வு கிடைக்கும் என்பதும் நன்றாகவே புலப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மல்லாகம் உப ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்த நபர் குறித்த ரயிலின் ஓட்டுநர் எனத் தெரியவந்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மீதே இவ்வாறு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்...

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று மாலை 4.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள்...

மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில்...

'அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால், வடக்குக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது' என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான, இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வட்டக்கச்சியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'அரசியல்வாதிகளுக்குள் இருக்கும்...

All posts loaded
No more posts