நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் : சிறிதரன்

இலங்கை அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தான் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். நான் அதற்காகவே சென்றேன் என்பதை எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று நண்பகல் 12.30க்கு...

தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18

எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது. நீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள்...
Ad Widget

வித்தியா கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றிலேயே நடத்த கோரி போராட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்தக் கோரியும், கடந்த ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு நீதியை வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் எதிர்வரும் 30 நாட்களுக்குள் உரிய பதிலை முன்வைக்க...

கிளிநொச்சியில் தம்பதி மீது கத்திக் குத்து: கணவன் பலி, மனைவி படுகாயம்

கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது, ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார். இன்று (16) மதியம் ஒரு மணியளவில் கனகபுரம் பழைய சந்தைக்கருக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், உதயநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு பலியானதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

ருவானின் கூற்றுக்கு பதிலளித்த சிவாஜிலிங்கம்

மே 18 நினைவேந்தல் நிகழ்வானது இன்று திருகோணமலை நகரின் கடற்கரையில் அமைந்திருக்கும் காந்திசிலைக்கு முன்னாள் மதியம் 1.45க்கு வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தீபம் ஏற்றப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்...

சர்வதேசத்தின் தலையீட்டின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம்: முதலமைச்சர்

சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால்...

முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். மாவட்டப் பிராந்தியக் காரியாலயத்தில் நேற்று (15) முறையிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட...

போதனா வைத்தியசாலையாக மாறுகிறது சைட்டம்

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று போதனா வைத்தியசாலையாக மாற்றி மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி அரசுடைமையாக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நேற்ற (திங்கட்கிழமை) குறித்த...

நாங்கள் மைத்திரி,ரணிலின் ஆட்சியை நம்புகின்றோம் : சம்பந்தன்

இலங்கையில் தற்போது ஆட்சி செய்துவரும் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவி தேவையென இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கைக்க பயணம் மேற்கொண்ட நரேந்திரமோடியை கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடாத்தியபோதே தான் இவ்வாறு கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சம்பந்தன்...

யாழ் பல்கலை மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு

இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும்...

யாழ்.நகரில் வாளுடன் வந்த ரவுடிகளால் நேற்று பதற்றம்

யாழ்ப்பாண நகர் ஸ்ரான்லி வீதியில் நேற்று மு.ப. 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர், இளைஞன் ஒருவ­ரைத் துரத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. வாளு­டன் வந்த இரு­வ­ரும் நக­ரில் சாதா­ர­ண­மாக நட­மா­டி­னர். மானிப்­பாய் பகு­தி­யைச் சேர்ந்த 21 வயது இளை­ஞன் ஒரு­வ­ரின் பெய­ரில் பதிவு செய்­யப்­பட்ட மோட்­டார் சைக்­கி­ளி­லேயே அவர்­கள் வாளு­டன்...

வித்தியா கொலை வழக்கை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி போராட்டம் இன்று மாலைவரை முன்னெடுக்கப்படுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘வித்தியாவிற்கான நீதி விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் வேண்டும்’, ‘மாணவியின் நீதி...

கேப்பாபிலவு காணிகளை விடுவிக்க இராணுவத்திற்கு 5 மில்லியன்: சுவாமிநாதன்

கேப்பாபிலவு இராணுவ முகாமினை மாற்றுவதற்காக இராணுவம் கோரியிருந்த 5 மில்லியன் ரூபாவினைப் பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற...

நாவற்குழியில் புதிய விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது!

நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றுக்காக தாதுகோபத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியுள்ளனர். தென்மராட்சி நாவற்குழியில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தெற்கில் இருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட சிங்களமக்கள் அரசகாணிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் வழிபாட்டுக்காக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு விகாரைக்கான தாதுகோபத்தை அமைப்பதற்கு கடந்தவாரம் அடிக்கல்...

‘கடைக்குச் சென்ற என் அம்மா எங்கே?’

முல்லைத்தீவு மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று (14) 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முதலமைச்சரின் வேண்டுகோள்

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அனைத்து வடகிழக்கு தமிழ் மக்களும் 3 நிமிட மௌன அஞ்சலியை அனுஷ்டிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் நாளாக இம்மாதம் 18ம் திகதி அனுஸ்டிக்கப்படவிருக்கின்றதாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு...

இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்க வேண்டும்

இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... எதிர்வரும் மே 18ஆம் நாள் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 8ஆவது ஆண்டு நினைவுநாளாகும். இவ் இனவழிப்பு நாளை நினைவு கூர...

இலங்கைக்கு போகவேண்டாம்: இசைஞானியின் வீடு முற்றுகையிடப்படும்

இலங்கையில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் நாளை (14) நடைபெறும் என்று, இது குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

மே 18ஆம் திகதி டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் தமிழ் மக்களை அச்சுறுத்த இடமளியோம்: சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஆம் திகதி, டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் வீடு வீடாக சென்று பொலிஸாரும், இராணுவத்தினரும் எமது தமிழ் மக்களை அச்சுறுவதை அனுமதிக்க முடியாது என வட. மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மே மாதம் 18ஆம் திகதி மத்திய அரசினால் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில்...

கிளிநொச்சியில் 83வது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்!

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை 83வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே...
Loading posts...

All posts loaded

No more posts