- Thursday
- December 25th, 2025
தென்மராட்சி கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அதனால் ஏற்பட்ட பதற்றத்தால் கால்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்றயதினம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் தென்மராட்சி கல்வி வலய...
கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினமும், நேற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த...
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிவரை இந்த ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கண்டி திகன நகரில் இன்று காலை முதல் ஏற்பட்ட அசாதாரண நிலமையை அடுத்தே இந்த ஊடரங்கு போடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்... முஸ்லிம்...
யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாங்களை அங்கு நகர்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுக்க முடியும் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழ். செயலகத்தில் இடம்பெற்றது. இராணுவம் மற்றும் பொலிஸார் வசமுள்ள மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போதே மாவட்டச் செயலர்...
தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி உட்பட்ட மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுத்த திட்டத்தில் விளைவே பேரூந்து குண்டுவெடிப்பிற்கு காரணம் என கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அண்மையில் தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் பொலிஸாருக்கு...
பொதுமக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுடன், எதிர்க்கட்சி தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கேப்பாப்புலவு காணிகளை...
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் நேற்று (01.03.2018) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு...
“ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதுக்காக தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் செல்லவுள்ளதாக” வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று (01) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட வடமாகாண...
கிழக்கு ஹௌட்டா மீது சிரிய படைகள் நடத்திவரும், கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கில் வாழும், தமிழ், முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதன்போது,...
இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடட அவர், “ஒரு கைக்குண்டு வெடிப்பின் மூலம் நிச்சயமாக...
அம்பாறை நகரில் இன்று (27) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகளினால் அங்கிருந்த ஒரேயொரு பள்ளிவாசலும், முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன் சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன. நேற்று (26) நள்ளிரவு வேளையில் அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் ஹோட்டலில் உணவருந்த வந்திருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில இளைஞர்கள் ஹோட்டல் உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...
யாழில் இந்து ஆலயம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ் – செம்மணி பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வடக்கில் அண்மைக்காலமாக இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லையென சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் இலங்கையில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான பிராஜ் பட்நாயக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொழும்பு கல்கிஸை பகுதியில்...
வடபகுதியில் பல்வெறு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேவையாற்றுகின்ற போதும் அதன் சேவைகள் இன்னமும் பூரணத்துவம் அடையவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வவுனியா புளியங்குளம் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், “வட...
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காணி அளவீட்டிற்காக இன்று (வியாழக்கிழமை) காலை அங்கு நில அளவையாளர்களும் காணி உத்தியோகத்தர்களும் அங்கு சென்றுள்ளனர். இதன்போது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் துரத்தியுள்ளார்கள். கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால்...
மைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப் பதவியை அவருக்கு கொடுக்கவிரும்பினால் கொடுக்கவோ பெற்றுக்கொள்ளவோமுடியும். அமைச்சராக இருந்த அவர் செய்யாததை நாங்கள் வெளியில் இருந்து செய்துள்ளோம் . அவரது அமைச்சுப் பதவிகளைக் கண்டு நாங்கள் அச்சம் கொள்ளவில்லை எனதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா...
மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்று பாராளுமன்றில் சம்பந்தன் கூறியது உணர்ச்சி அரசியலோ அல்லது தனது பதவி போய்விடும் என்ற பதட்டத்தின் வெளிப்பாடோ அல்ல. அவர் இந்திய மேற்குலகின் நலனடிப்படையில் நிதானத்துடன் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கையே என கூறியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தாங்கள் கடந்த எட்டு வருடமாகக் கூறிவந்த...
கடந்த காலத்தில் பயங்கர குற்றங்களுடன் தொடர்புபட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட 150 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச காவல் துறையின் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயத்தினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட...
மன்னார் மாவட்டம் தேசியக் கட்சியொன்றினால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தமிழ் தலைமைளும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் முடிவு பற்றிக் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் பிரிதிநிதிகளிடமும் உள்ள ஒற்றுமையீனம் காரணமாகவே...
தாமரை மொட்டிலிருந்து அமைதியும் இணக்கமும் சுபீட்சமுமே மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றினால், கட்டாயம் தமிழீழம் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்ததன் பின்னணியில் நாமல் இந்த கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து நாமல் தனது...
Loading posts...
All posts loaded
No more posts
