- Thursday
- December 25th, 2025
யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவமானது இன்று முற்பகல் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ்.வைத்தியசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்து வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியவற்றை...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மற்றய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (16) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது இச் சம்பவத்தில் அச்சுவேலி பத்தமேனி பகுதியினை சேர்ந்த...
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாத நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றபோதே, கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட...
பொலிஸாரின் பயன்பாட்டிலுள்ள யாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தையும், கிணற்றையும் உடனடியாக விடுவிக்க வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள்...
2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் பிரேரணைகள் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன என்று தமிழ்த் தேசிய...
இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதைக் கண்ணுற்றதாக கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக கடமையாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற உபகுழுக்கூட்டத்தில் தெரிவித்தார். “மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன. மக்கள் கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த நிலையில்...
“சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரித்தானியா ஒழுங்குபடுத்திய உறுப்புநாடுகளுக்கான...
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள்...
அடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் கடற்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில்...
தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில், பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல், பிரதான வாயிற் கதவுகளை மூடல் ஆகிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்தி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக...
சமூக வலைத்தளங்களை தொடர்ந்து ஏனைய வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கு முறைகளை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டில் நிலவிய இனங்களுக்கிடையிலான மோதலை பாரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்ததாக குறித்த சந்திப்பில் கருத்து...
சமூக ஊடக வலையமைப்பு குறித்த தடைகளை ஜனாதிபதியும், பிரதமரும், டிஜிட்டல் கட்டுமான அமைச்சரும் மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்த சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாற்றுவழிகளை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் மற்றைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர்...
கண்டி நிர்வாக மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த பிரதான சந்தேகநபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் மேலும் ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றயதினம் (வியாழக்கிழமை) காலை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அமித் ஜீவன் வீரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்...
இலங்கையின் பொறுப்புக்கூறல் நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஆணையாளரினால் ஜெனிவாவில் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”இலங்கையில் இன ரீதியாக சிறுபான்மையினரை...
நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள்...
யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய (புதன்கிழமை) செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிகமுக்கியமான ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும்....
கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றுபிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது. கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25 இற்கு மேற்பட்ட கடைகள், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வானில் கரும்புகை...
2013ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியாதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர் மீதான அந்தத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினருமே நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்று எம்மீது குற்றம் சுமத்தியதுடன், சில தமிழ்...
நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை 10 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இன வன்முறைகளைத் தடுக்கவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வௌயிடப்படும் என்றும் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்தார். 10 நாள்களுக்கு அவசரகாலச்...
“வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது. அதில் எள்ளவும் ஐயமில்லை என்பதனை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக” வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்...
Loading posts...
All posts loaded
No more posts
