நெப்போலியனை நாடுகடுத்தும் ஏற்பாட்டுக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

கடந்த 2001ஆம் ஆண்டு யாழ்.ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் மற்றும் மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா ஆகியோரை இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன்...

ஊர்காவற்துறை படுகொலை சந்தேக நபர்கள் 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக குற்றச்சாட்டு

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி, அடையாள அணிவகுப்பின் போது தம்மை அடையாளம் காட்ட வேண்டாம் என தெரிவித்து 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின்...
Ad Widget

யாழில் மீண்டும் பயங்கர வாள்வெட்டு!

சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இனந்தெரியாத நான்குபேர் வீதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு...

பெருந்தொகைப் போதைப் பொருட்களுடன் வடக்கு கடற்பகுதியில் ஆறு இந்தியர்கள் கைது!

ஹெரோயின் என சந்தேகிக்கத் தக்கதான பெருந்தொகைப் போதைப் பொருட்களுடன் வடக்கு கடற்பகுதியில் ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் நிறை 13.5 கிலோ கிராம் எனவும் இதன் பெறுமதி 13 கோடி ரூபா எனவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அடுத்த கட்ட விசாரணைக்காக...

இலங்கையர் உள்ளிட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் கைது

இலங்கையர் உட்பட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மத்திய தரைக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் லிபியாவின் சப்பிரதா நகரில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 480 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற இரு படகுகளே ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டதாகவும், அவர்களுள் சிறுவயது குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது....

திருமண வீட்டில் நகைகள் பணம் களவு!

திருமண வீட்டில் இரவு வேளை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 37 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் ரொக்க பணமும் களவாடி சென்றுள்ளனர்.. யாழ். புன்னாலைக் கட்டுவான் வடக்கில் வசிக்கும் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை குறித்த வீட்டில்...

புலிகள் எரித்துப் படுகொலை; இராணுவத்தினருக்கு அதிகுற்றச்சாட்டுப் பத்திரம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரை, எரித்துப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. புலி உறுப்பினர்கள் இருவரும், 1997ஆம் ஆண்டே எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்

2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமுக்குள் மற்றுமொரு இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வவுனியா மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலையை குற்றவாளி செய்துள்ளதாக கூறப்படுகிறது

யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை!!

“யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை வழங்கப்பட்து இன்றைய தினமே” என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் இருவரை கொலை செய்யும்...

முக்கொலைகளையும் நானே செய்தேன்!

நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரி தனது சாட்சியத்தில் தெரிவித்து உள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை புதன்கிழமை மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா....

அச்சுவேலி முக்கொலை ; இரண்டாம் நாள் சாட்சிப் பதிவுகள்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் இரண்டாம் நாள் சாட்சிப் பதிவுகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது. சாட்சியப்பதிவில் கொலை சம்பவத்தில் தடயப் பொருள் ஆய்வினை செய்த யாழ்.சோக்கோ பொலிஸ் பிரிவில் சம்பவம் நடந்த காலப்பகுதியில் கடமையாற்றியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஜெயவம்ச சாட்சியமளித்தார்....

திருமலை மாணவர்கள் படுகொலை: சாட்சியாளர்களை தேடுவதற்கு உத்தரவு

திருகோணமலையில் பாதுகாப்புப் படையினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்ட தரப்பின் இரு சாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி...

ரவிராஜ் கொலை வழக்கு; விடுலையான கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்குமாறு உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படையின் மூன்று புலனாய்வு அதிகாரிகளையும் கண்டுபிடிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் இறந்து விட்ட நிலையிலும், இருவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால் வழக்கில் சமூகமளிக்காத...

” கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க” என கத்திக்கொண்டு வாளினால் வெட்டினார்

நானும் நாலு மணித்தியாலங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். என்ன கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க என கத்திக்கொண்டு வாளினால் என்னை வெட்டினார் என தனஞ்செயன் தர்மிகா என்பவர் யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை...

வல்வெட்டித்துறையில் 2KG ஹெரொயின் மீட்பு

வல்வெட்டித்துறை பகுதியில் 2kg கிலோ ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரும், மதுவரி திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில் குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போதைபொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் வல்வெட்டித்துறை பகுதியில் போதைபொருள் கொண்டுவரப்படுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின்...

இலங்கையிலிருந்து கடத்திச்சென்ற தங்கத்துடன் தமிழகத்தில் ஒருவர் கைது

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை வைத்திருந்தவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்தே, இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தங்க கட்டிகள் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தயாரான நிலையிலேயே, 16.5 கிலோ தங்க கட்டிகள்...

கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஊர்காவற்துறை கர்ப்பிணி படுகொலை வழக்கின் சந்தேகநபர்களான சகோதர்கள் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணையை அடுத்து வழக்கினை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில்...

நாய்களைத் தெருவில் விட்டால் 2 வருட சிறைத்தண்டனை!

நாய்களை பொது இடங்களிலும் தெருக்களிலும் விட்டுச்செல்லும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதற்கமைய, நாய்களைத் தெருக்களில் விடுபவர்களுக்கு எதிராக, 1901ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க நாய்களை பதிவு செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது. இதன்படி நாயொன்றினைத் தெருவில் விட்டுச் செல்லும்...

ஆலயத்திற்குள் மது அருந்திய நால்வர் பொலிஸாரால் கைது

தெல்லிப்பழை, பன்னாலையில் உள்ள ஆலயம் ஒன்றில் மறைந்திருந்து மது அருந்திய நால்வரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் மது அருந்துவதாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் வாகன சாரதிகள் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த நால்வரும் ஆலயத்தோடு தொடர்பு...

புங்குடுதீவு மாணவி கொலை: விசாரணைகள் 98% நிறைவு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது என, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று (22) தெரிவித்தார். மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts