- Tuesday
- September 15th, 2026
4 கிலோ கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். அரியாலை பூம்புகார் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். யாழ். சாவகச்சேரி கோவிலாக்கண்டி பகுதியைச் சேர்ந்த இவர் 5 இலட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கேரளா கஞ்சாவினை...
யாழில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவரை, கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த 14 ஆம் திகதி திருநெல்வேலி – நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச் சென்றதாக கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குளி பகுதியைச் சேர்ந்த...
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கியும், 611 ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவுவேளை வீதிக் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் அவ்வீதியால் வந்த மோட்டர் சைக்கிளில் சென்றவரை மறித்துச் சோதனையிட்டபோதே குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மோட்டர் சைக்கிளை செலுத்தி...
எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக யாழ். ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதி மன்றங்களினால் 109 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன்போது யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றினால் 79 மீனவர்களும் யாழ். பருத்தித்துறை நீதிமன்றினால் 30 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். தமிழகம் இராமநாதபுரம்,...
கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமை தொடர்பில் கப்டன் தர இராணுவ அதிகாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஏற்கனவே மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கப்டன் தரத்தை உடைய மற்றொரு அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இரானுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் பிரிவின்...
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கிளிநொச்சி வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த...
இளவாளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளான் சந்தி அராலி – தெல்லிப்பழை வீதியில் கால்பந்தாட்ட நடுவர் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் சம்பவத்தில் உரும்பிராயைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 58 ) என்பவரே வாள்வெட்டுக்குள்ளாகிப் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன துண்டறிக்கைகளை வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவ்இருவரையும் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக மானிப்பாய் பொலிஸார்...
குடிபோதையில் வாக்களிக்க வருபவர்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற விதத்தில் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியகட்சருமான ருவன் குணசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் அதிகாரிகள், அனைத்து...
ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பான குற்றசாட்டின் சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே...
புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் கவசவாகனம் மோதி, பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கடற்படையின் வாகனச் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது, மாணவியை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற மாணவியின் மாமனாரையும் பொலிஸார்...
மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு படகு மூலம் பயணித்த கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை தனுஷ்கோடி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நால்வரும் இன்று (வியாழக்கிழமை) தகுஷ்கோடியை சென்றடைந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் பகுதியை சேர்ந்த...
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் கழுத்தில் பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிர் பொலிஸார் தெரிவிக்கையில்... இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. “மதுபோதையில் வந்து தன்னை தாக்குவதாக குடும்பத்தலைவரின் மனைவி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனடிப்படையில்...
யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் (03.02.2018) மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது தாம் ஈபிடிபியினர் என கூறியவாறு ஈபிடிபியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள் இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த...
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 09 ஆம் திகதி முதல் நேற்று காலை 06.00 மணிவரை 559 தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை நாட்டின் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன. அதன்படி தேர்தல்...
கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் கூறப்பட்ட இக்ரம் தவிர்ந்த ஏனைய 5 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று பிணையில் விடுவித்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டுவந்தவர்களான முஸ்லிம் இளைஞரான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில்வைத்து...
“உள்ளூராட்சி சபைகள் தேர்தலின் போது வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது, தண்டனை சட்டக் கோவையில் உள்ளவாறு ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமான சூழ் நிலைகள் ஏற்படுமாயின் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்” இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் நேற்று (01) தெரிவித்தார். யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடொன்றில் கடந்த...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு , நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது. என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். யாழில். வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட இருவருக்கு தலா நூறு ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கடந்த 20ஆம் திகதி இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும்...
Loading posts...
All posts loaded
No more posts
