Ad Widget

மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு படகு பயணம்: கர்ப்பிணி உட்பட நால்வர் கைது

மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு படகு மூலம் பயணித்த கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை தனுஷ்கோடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நால்வரும் இன்று (வியாழக்கிழமை) தகுஷ்கோடியை சென்றடைந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நிரோசன், அவரது ஒன்பது மாத கர்ப்பிணியான மனைவி, ஐந்து வயது மகள் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மன்னார் பகுதியிலிருந்து கண்ணாடியிலைப்படகு மூலம் 60 ஆயிரம் ரூபாய் செலவழித்து தனூஷ்கோடிக்கு சென்றுள்ளனர். கடந்த 1990இல் இலங்கையில் நடைபெற்ற யுத்த காலத்தில் அகதிகளாக வந்து மண்டபம் முகாமில் தங்கியிருந்த இவர்கள், கடந்த 2011ல் மண்டபம் அகதி முகாமிலுள்ள அரசு மருத்துவமனையில் தனது மனைவிக்கு வயிற்றில் சத்திரசிகிச்சை செய்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

பின் கடந்த 2012ல் கடவுச்சீட்டு மூலம் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், மனைவியில் பிரவசத்திற்காக மீண்டும் இங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் விசாரணை நடத்திய பொலிஸார், கடவுச்சீட்டு இன்றி பயணித்த குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்துள்ளனர்.

Related Posts