பொலிஸ் அதிகாரியின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்!! சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!!

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து...

வாள்களுடன் மூன்று இளைஞர்கள் கைது

உடுவில் பகுதியில் வாள்களுடன் பயணித்தார்கள் என்ற குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் உடுவில் பகுதியைச் சேர்ந்த 21, 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மோட்டார்...
Ad Widget

உதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை

பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் பேரில் 75 பேரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பருத்துறை-...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருட்டு: ஒருவர் கைது

நல்லூர், கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து, மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோது, அன்றைய தினம் மாலை மல்லாகம் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் நல்லூர்...

நவாலியில் நான்கு வீடுகளை தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது

நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள நான்கு வீடுகள் , ஒரு ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஆகியவற்றுக்கு தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி எனும் இடத்தில் உள்ள நான்கு வீடுகளுக்குள் புகுந்த முகத்தினை துணிகளால் மூடி கட்டியவாறு உட்புகுந்த வன்முறை கும்பல்,...

கல்வியங்காடு வீடுகளுக்குள் அட்டூழியம் – ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் கைது

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதல் மற்றும் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்படடார். கோப்பாய், கல்வியங்காடு – ஆடிய பாதம் வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து 4 வீடுகளுக்குள்...

வாள்வெட்டு கும்பலிடமிருந்து தப்பிக்க துவிச்சக்கரவண்டியை எறிந்த நகைக்கடை உரிமையாளர்!!

யாழ்.நகரில் இயங்கும் பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் வாள் முனையில் கொள்ளையிட முயன்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கடை உரிமையாளர் கடையைப் பூட்டிவிட்டு வீடு செல்லும்போது வாள் முனையில் கொள்ளையர்கள் அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற நிலையில் தனது சாதுரியத்தினால் தப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நகைக் கடை நடாத்தும் ஓர் உரிமையாளர்...

கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது!

வவுனியா நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நுழைந்து கொள்ளையிட்டார் என்ற குற்றசாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியா பொலிசாரினால் கைது செய்யபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது , வவுனியாவிலுள்ள அரச விடுதியில் தங்கியுள்ள அரச உத்தியோகஸ்தரை குறித்த இராணுவ சிப்பாய் சந்தித்து இலத்திரனியல் பொருள் ஒன்றினை வழங்கி அதனை விற்று தருமாறும் பின்னர் வந்து...

வைத்தியர் மீது தாக்குதல்: வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கர்ப்பிணி தாயொருவர் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு, அறுவை...

யாழில் வெறிச்செயலில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல்!

யாழ்.குப்பிளான் வடக்கில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி, பாடபுத்தகங்கள், உள்ளிட்ட பல்கலை கழக மாணவியின் உடமைகளை தீக்கிரையாக்கி , வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. குப்பிளான் வடக்கில் நேற்று(புதன் கிழமை மாலை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,...

கல்வியங்காடு பகுதியில் மூன்று வீடுகளுக்கு புகுந்து வாள்வெட்டு – பெண் உள்பட மூவர் காயம்!!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 3 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தந்தை, தனயன் மற்றும் குடும்பப் பெண் என மூவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். அடுத்தடுத்து மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல்,...

யாழ். குடாநாட்டை அச்சுறுத்திவந்த ஆவாக் குழு உறுப்பினர் கைது!

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கைது இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கு – சிறுமியின் நண்பியிடம் சாட்சியப்பதிவு!

யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள காட்டுப்புலம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக உறவினர்களிடம் வெளிப்படுத்திய சிறுமி மற்றும் சிறுவன் ஒருவனிடமும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதிவானின் சமாதான அறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கின் முக்கியமான சாட்சிகள் இருவரை எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாக மல்லாகம் நீதிமன்றால்...

LTTE முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் பன்படுத்தப்பட்ட தற்கொலை குண்டு உட்பட வெடிபொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த...

நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. அவரது ஒப்புதல் வாக்கு...

கிளிநொச்சி யுவதி படுகொலை: சந்தேகநபர் கைது

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கிளிநொச்சி, பன்னங்கண்டி...

யாழில், பிரதேச சபை தவிசாளரின் வாகனம் விபத்தில், மதுவில் சாரதி, காப்பாறியது காவற்துறை!!

வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம் சுன்னாகம் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது சுன்னாக காவற்துறையினர் செயற்பட்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் சந்தியில் நேற்று வியாழக்கிழமை (30.08.18) குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது குறித்து விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில் , தவிசாளரின்...

கிளிநொச்சி யுவதி படுகொலை: உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடது புற கண்ணுக்கு மேற்பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐந்து மாத கர்ப்பிணி எனவும்...

குற்றவாளிக்கு தண்டப்பணம் 5 ரூபா!! பொலிஸார் மீது மக்களுக்க சந்தேகம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படும். எனினும், யாழ்ப்பாண பொலிஸாரால் 1866ஆம்...

கிளிநொச்சியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றை சோதனையிட்ட போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வாகனத்திலிருந்து 1 கிலோ 80 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தேராவில் வலைப்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பூநகரி...
Loading posts...

All posts loaded

No more posts