- Tuesday
- September 15th, 2026
தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை இன்று வரை நீடித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்து வரும் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, விடுப்பில் இருப்பதால் வழக்கு...
யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்தாம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 27 மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, தடை செய்யப்பட்ட வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஏழு மீனவர்கள் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 14 ஆயிரம் அபராதம்...
உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு உடையார் கட்டு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் லூத்மாத...
கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டதால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் நையப்புடைத்து அனுப்பிவைத்தனர். அத்துடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம், கலட்டிச்...
வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அரசியல்வாதியின் செயலாளர் இன்று கைதாகியுள்ளார். சுவிஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 7...
சுழிபுரம் சிறுமி ரெஜினா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு மல்லாகம் நீதிமன்றம் மீண்டும் விளக்கமறியல் நீடித்துள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற சிறுமி கடந்த ஜுன“ மாதம் 25 ஆம் திகதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் கழுத்தில்...
“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும். தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்” இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள மருத்துவர் ஒருவரின்...
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்” இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்....
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார். சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த...
யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொக்குவில் சம்பியன் லேனில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. “3 மோட்டார்...
யாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு வாகனத்தின் மின் விளக்குகளை அணைக்காமல் சென்றதனால் இரு தரப்புக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முறுகல் நிலை மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலை அவதானித்துக்...
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலையம் ஒன்றின் நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்வி கற்று வருகின்ற நிலையில்,...
தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை விண்ணப்பத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது. “சந்தேகநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவற்றின் சில ஆவணங்கள் மன்றில் இன்னும் முன்வைக்கப்படவில்லை. எனவே சந்தேகநபரைப் பிணையில்...
யாழ்.நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் நகையும் திருடப்பட்டுப்போனதையடுத்து விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் விக்டோறியா வீதியில் அமைந்துள்ள வெளிமாவட்டத்தவர்களுக்கான விடுதியிலேயே நேற்று (வியாழக்கிழமை) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் சுற்றுலாவின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் குறித்த விடுதியில் தங்கியபோது,...
யாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருட்கள் பாவனை, வீடுகள் மீதான தாக்குதல்கள் என பல குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், யாழில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் சில குழுக்களின் இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் வைத்து கடந்த மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 24 மற்றும்...
முல்லைத்தீவு - நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி கடற்றொழிலில் ஈடுபட்ட 27 வெளி மாவட்ட மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அச்சுவேலி வடக்குப் பகுதியில், தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தனியார் பேருந்து அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்தின் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர்,...
யாழ், குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய், ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட, திடீர் சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “வடக்கில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கு, பொலிஸாரும் இராணுவத்தினரும்...
பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றினர். இவற்றைக் கடத்திய குற்றச்சாட்டில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து காரில் கொழும்பு செட்டித் தெரு நோக்கிப் பயணிக்க இருந்த இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....
Loading posts...
All posts loaded
No more posts
