சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்கள் ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது, தங்களின் வழக்கை யாழ்ப்பாணத்திற்கு...

குற்றச்செயல்கள் விசாரணைகளில் அலட்சியம்!! – யாழ் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உள்பட அனைவருக்கும் தண்டனை இடமாற்றம்

குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளில் மெத்தனப் போக்கைக் கடைபிடிப்பதால் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க துணை போவதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பல தடவைகள் கண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவிலுள்ள பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக பொலிஸாரும் இடமாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் கடந்த மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் அசண்டையீனமாகச் செயற்பட்டதாக குற்றத்தடுப்புப் பொலிஸ்...
Ad Widget

விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறை!

பொல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மாத்தளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதில்...

சிறுமி ரெஜினா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

சுழிபுரம் ஆறு வயது சிறுமி ரெஜினா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினா சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை...

யாழில் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 38 பேர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மோதல்களில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார். யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, அண்மைக்காலங்களில்...

யாழில் பதின்ம வயதுத் திருமணங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!!

“யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ்...

யாழில் பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் கைது!

யாழில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (திங்கட்கிழமை) சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றசாட்டில் சாவற்காட்டு...

சிறுமியுடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த 70 வயது முதியவருக்கு விளக்கமறியல்!

யாழில் ஆறு வயது சிறுமியுடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நாவற்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீதியால் நடந்து சென்ற சிறுமியை முதியவர் ஒருவர் தவறான நோக்கத்துடன் கையை பிடித்து இழுத்தார் என சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ்...

சிறுமிகளுக்கு துன்புறுத்தல்: வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு 3 மாதங்களின் பின் பிணை!

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 3 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தது. சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். “ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் சில சிறுமிகளின் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன....

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் குடியிருப்பை வைத்திருந்தார் என யாழ். மாநகர சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுசூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த வியாழக்கிழமை (20) சுகாதார துறையினர், பொலிஸ் உத்தியோகத்தர் சகிதம் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்....

முதியவரின் மோதிரங்களை அபகரித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பவதிப் பெண் கைது!

தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த முதியவரின் மோதிரங்கள் இரண்டை கொள்ளையடித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பவதிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெறும் மாதாந்த சிகிச்சைக்காக நேற்றைய தினம் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்தவேளை வைத்தியசாலையில் வெள்ளை உடுப்புடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கே நின்று முதியவரை...

புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ். நீதிமன்றில் வழக்கு

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம், வழக்கை வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. புத்தரின்...

யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த அந்தனர்கள் கைது!!

யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டில் அந்தணர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். கோப்பாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவற்துறையினர் குறித்த இரு அந்தணர்களையும் மறித்து சோதனையிட்ட போது இருவரின் உடமையில் இருந்து சிறியளவிலான கஞ்சா பொதிகளை...

சுழிபுரம் ரெஜினா கொலை – மூடிய அறையில் சாட்சிப் பதிவு

சுழிபுரரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ரெஜினாவின் கொலை வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன. மல்லாகம் நீதவான் நீதீமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில்...

வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்கிழமை இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. இதன்போது வீட்டில் இருந்த ஒருவரால் குறித்த...

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த பெண் சட்டத்தரணி : நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

புத்தரின் உருவம் பொறித்த அலங்காரம் அமைப்புக்கொண்ட சேலை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதால் நீதிமன்ற வளாகத்தக்குள் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மூத்த சட்டத்தரணிகள் தலையிட்டு நிலமையை சுமுக நிலைக்குக் கொண்டு வந்தது. அத்துடன், பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இளம் பெண்...

சுவிஸிலிருந்து தாயகம் திரும்பியவர் மீது சுன்னாகம் பொலிஸார் தாக்குதல்!

சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஒருவர் தனது பரம்பரை சொத்தை மீட்பதற்கு நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் உடுவில் மகளிர் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பல கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்குச் சொந்தக்காரரான மொறிஸ் அருணாசலம்...

பொலிஸ் வாகனம் கடத்தல்: நால்வர் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தொிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று திருமண விருந்து உபசார நிகழ்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸ் அவசர...

பழுதடைந்த உணவு விநியோகம்: மண்டப முகாமையாளர் பிணையில் விடுதலை!

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவினைப் பரிமாறிய குற்றசாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மண்டபத்தின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிதரன் மண்டப முகாமையாளரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கினை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்தார். உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்...

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற 88 இலங்கையர்கள் கைது!

படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களை கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார். நேற்று அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில்...
Loading posts...

All posts loaded

No more posts