- Tuesday
- September 15th, 2026
யாழில் சட்டவிரோதமாக போலி லேபலுடன் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 6 ஆயிரம் குடிநீர் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய விநியோக வர்த்தக நிலையத்தின் மீது நேற்றையதினம் சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது குடிநீர்ப்போத்தல்கள் நிறுவன பதிவு இலக்கம்...
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்து, அதற்கு...
“யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்” இவ்வாறு யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துத்துரைத்தார் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன். யாழ்ப்பாணம் – கொக்குவில் தொடருந்து நிலையத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான சிறியரக வாள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்...
யாழ்.குடத்தனை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளுக்குள் புகுந்த தாக்குதலாளி ஒருவர் வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு இருந்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட...
பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் வீடொன்றுக்குள் புகுந்த நபர் தம்பதிகளை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி படுகாயமடைந்துள்ளார். பின்னர் மற்றொரு வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் வீட்டின்...
யாழ்ப்பாணம், அராலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய பெண்ணும் 80 வயதுடைய ஆணும் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை- அராலி...
மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் பாக்கியராஜா (வயது – 63) என்பவரே தனது உயிரை மாய்த்தார். தந்தையில் கத்தி வெட்டுக்கு இலக்காகிய அவரது மகன் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு...
வட்டுக்கோட்டையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். இதன் போது , கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச...
போலிக்கடவுச் சீட்டின் மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவிற்கு பயணிக்க முயற்சித்த நிலையிலேயே நேற்று(செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை துவாரகன் (வயது...
மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றது. வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று...
யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களளுள் 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை தொடக்கம் இந்த பொலிஸ் தேடுதல் நடவடிக்கை...
கத்தி, கொட்டன்களுடன் அதிகாலையில் வீடுகளுக் குள் புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டது. ஐந்து வீடுகளில் இருந்த பொருள்கள், வேலிகள், மின்குமிழ் கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பம் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் ஏழாலையில் நடந்துள்ளது. கொக்குவில், சுன்னாகம், இணுவில், மானிப்பாய் பகுதிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற தொடர்வன்முறைச் சம்பவங்களையடுத்து அந்தப் பகுதிகளில் 24 மணிநேரம் சுற்றுக்காவல்...
சுமார் ஒரு இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் பொன்னாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். “காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு போலி நாணயத்தாள்களை இருவர் கடத்திச் செல்கின்றனர் என்ற தகவல் கடற்படையினர் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் பொன்னாலைப்...
யாழ் நகரில் வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்து ஐயாயிரம் ரூபா போலித்தாள்கள் 2 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ். உப பொலிஸ் பரிசோதகர் அனில் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று இவ்வாறு குறித்த நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர். குறித்த கடையில் போலித்தாள்கள் கைமாற்றம் செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் பொலிஸாருக்கு...
யாழில். டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட ஐவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று கடுமையான எச்சரிக்கையுடன் பிணை வழங்கியுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் அவதானித்து அதனை சீர் செய்யுமாறு...
யாழ்.நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேறொருவரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்க முயற்சித்தவர் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். யாழ்.நகரின் மத்தியில் உள்ள வங்கி ஒன்றின் கிளையிலையே குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்று உள்ளது. குறித்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஏ.ரி.எம். அட்டையை தவறவிட்டுள்ள...
தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தாம் அச்சத்துடனேயே வீதிகளில் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த காவல்துறை பிரிவுக்குள் மாத்திரம் 15 வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மல்லாகத்தை அண்மித்த பகுதியில் காங்கேசன்துறை பிரதான வீதி வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்த...
மகளிர் மற்றும் சிறுவர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை தடுக்கும் காவல்துறை பிரிவினரால் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் தெரிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு...
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக வாகனங்களை பொல்லுகளை காட்டி நிறுத்தி பணம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்தவர்களில் இருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இதனால் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக மக்கள் திரண்டனர். வாகன நெரிசலும் ஏற்பட்டது. கிளிநொச்சி...
Loading posts...
All posts loaded
No more posts
