முல்லைத்தீவில் மீண்டும் காணி சுவீகரிப்பில் படையினர்!

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை புதிய சரத்தின் கீழ் அபகரிக்கும் பொது அறிவித்தல் நேற்றுமாலை பிரதேச செயலாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களிற்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின்...

பொருத்தமற்ற இடத்தில் புதிய சுடலை, எரிக்கவும் முடியாது புதைக்கவும் முடியாது மக்கள் திண்டாட்டம்

கிளிநொச்சி கணகாம்பிகை குளத்தில் மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பொருத்தமற்ற இடத்தில் சுடலை அமைத்துள்ளமையால் மழைக்காலங்களில் புதைக்கவும் முடியாது எரிக்கவும் முடியாத நிலையில் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது பாடசாலைக்கு அருகில் மக்களின் குடியிருப்புக்களுக்கு நெருக்கமாக புதிய சுடலை அமைக்கும் பணியை அரசியல் தரப்புக்கள் மேற்கொண்ட போது அதற்கு மக்கள்...
Ad Widget

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் பிரதான வீதியில், கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள பாலம் நிர்மாணிக்கப்படாமையால், வெள்ள நீர் நிரம்பி பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் குறித்த வீதி, மழைக் காலங்களில் வீதி எங்குள்ளது, பள்ளங்கள் எங்குள்ளன என்பது தெரியாத அளவிற்கு காட்சியளிக்கின்றது. அண்மைய...

A32 வீதியின் போக்குவரத்து தடைப்படும் அபாயம்!

தற்போது பெய்து வரும் கடும்மழை காரணமாக, பூநகரி, மண்டைக்கல்லாறு ஏ - 32 (யாழ்ப்பாணம் - மன்னார்) வீதியை ஊடறுத்து, நீர் பாய்வதால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பகுதியூடாக 1 அடிக்கும் மேலாக நீர் பாய்கின்றது. இதனால் இப்பகுதியூடாக கனரகங்களைச் செலுத்திச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீதியினூடாக...

இராணுவத்திடமுள்ள காணியை விடுவிக்க விரைவில் நடவடிக்கை

இராணுவத்தினரின் வசத்திலுள்ள, கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சிக்கு திங்கட்கிழமை விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கிளி.மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, யுத்த பாதிப்புக்கு உள்ளாகிய மேற்படி...

மக்கள் சிந்தனையாளன் ஐங்கரநேசனும் மக்கள் சிந்தனையற்று சுயநலமாச் செயற்படும் மனப்பிறள்வாளர்களும்!: சு.பசுபதிப்பிள்ளை

ஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண சபை...

வன்னியில் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணி இணைப்பு செயலகம்

சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் வன்னி இணைப்பு செயலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலகத்தை சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன. வவுனியா...

கிளிநொச்சியில் 16 மில்லியன் செலவில் நவீன விதை சுத்திகரிப்பு நிலையம்

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நவீன விதை சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத்துக்கென 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விதை சுத்திகரிப்பு நிலையத்தை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம்...

எலிக்காய்ச்சலால் ஒருவர் பலி, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

கிளிநொச்சியில் எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா் மரணமடைந்துள்ளார் என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி வயல் விதைப்பில் ஈடுப்பட்ட பின்னா் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி மருதநரைச் சோ்ந்த 57 வயது நிரம்பிய விவசாயியே எலிக் காய்ச்சல் காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார். எனவே...

தந்தை மற்றும் மகன் மீது வாள்வெட்டு

நாச்சிக்குடாக் கடற்கரையில் பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது, நேற்றுப் புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நாச்சிக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற இவ்வாள் வெட்டுச் சம்பவத்தில், குமுழமுனை வீதி நாச்சிக்குடாப் பகுதியினைச் சேர்ந்த மீராசஜித்...

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட நடமாடும் மருத்துவ சேவை

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு விசேட நடமாடும் மருத்துவ சேவையொன்றினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் மருத்துவ தாதிய உத்தியோகத்தர், உளநலஆலோசகர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகியோர் இடம்பெறுவரென சுகாதார அமைச்சரின் ஊடக...

ஏழு அடி உயரமான கஞ்சா செடி மீட்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக ஏழு அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது. மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட தேடுதலின்போது குறித்த கஞ்சா செடியும், 25 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய தேடுதல் மேற்கொண்ட விசேட...

ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசாங்கம் தப்பிக்க முடியாது: சுமந்திரன்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதால் அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காமல் போகுமென சிலர் அஞ்சுவதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட 47 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுள்...

மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பலி, இன்னொருவர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவிப் பிரதேத்தில் வயலில் வேலைசெய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி இறந்துள்ளதுடன் இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்துள்ளவர் மல்லாவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மல்லாவிப் பகுதியில் தனது வயலில் வேலைசெய்துகொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (62) என்ற விவசாயியே பலியாகியுள்ளார். இவரது சடலம்...

கால்நடை மருத்துவ நடமாடும் சேவை கிளிநொச்சியில் நடைபெற்றது

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.11.2016) கால்நடை மருத்துவ நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். கால்நடைகளைச் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதில் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 355 பணியாளர் வெற்றிடம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிர்வாகங்களில் 1099 பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 744 பணியாளர்களே கடமையாற்றுவதனால் 355 பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின்கீழ் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் என்பவனவற்றிலேயே குறித்த பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இதன் பிரகாரம் மாவட்டச் செயலகத்தில் 203 பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய...

மீண்டும் ஒரு எழுக தமிழ் எழுக்கூடாது என தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள் !

யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள்...

கிளிநொச்சியில் இடம்பெறும் தொடா் கைதுகள்

யாழ் பல்கலைகழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25 ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின் போது கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவா்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றாா்கள். இதுவரை மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனையவா்களையும் கைது செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியான...

கடலோரப் பாதுகாப்புக்கு மத்தியில் கஞ்சா வடக்கிற்கு எவ்வாறு வருகின்றது; முதலமைச்சர் விக்னேஸ்வரன்

கடலோரப் பாதுகாப்புக்கள் மிகவும் இறுக்கப்பட்டுள்ள நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். போராட்ட காலங்களில் மிக அமைதியாகக் காணப்பட்ட வட பகுதி இன்று கேரள கஞ்சா வர்த்தகத்தின் வர்த்தக மையமாக உருவாகியிருப்பது கவலையைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கில் 1 இலட்சத்து 50...

சப்பாத்து அணிந்து வராத மாணவா்களின் காலணிகளை தீ வைத்த ஆசிரியர் கிளிநொச்சி மீண்டுமொரு சம்பவம்!

கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின் காலணிகள் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை கல்விக் கேட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11...
Loading posts...

All posts loaded

No more posts