- Wednesday
- July 29th, 2026
விச ஊசி விவகாரத்திற்கு தீர்வு காணும் முகமாக முன்னாள் போராளிகளுக்கு இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) யாழில் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் வட மாகாண அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பிலான நிகழ்ச்சி நிரலில் சி.வியுடனான சந்திப்பு உள்ளடக்கப்படாத போதிலும் இலங்கைக்கான...
வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும் போது வடமாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்து இருந்தார். இக் கருத்து தொடர்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கும் போது, வடமாகாண கல்வி அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே 4 ஆயிரம்...
எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்குப் பயணம் செய்யும் ஐநா செயலரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ள நிலையில், தன்னையும் அவர்களுடன் வந்து சந்திக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐநா செயலரின் இலங்கைப் பயணத்தின்போது...
எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமையன்று, இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன், இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் மூன், யாழ்ப்பாணத்துக்கும் சென்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் மற்றும் தமிழ்த் தேசியக்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பேராதனை பல்கலைக்கழகக் கல்வி பயிலும் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மாணவர்கள் பலர் தமது பெற்றோருடன் என்னை...
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக சிலர் கூறுவது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் தாம் பிரபல்யம் அடைவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதாக வேறு சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சர்வதேச...
வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 7 வருடங்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது. முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் யாழ்பாணம் ஐந்து...
இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட வடக்கு முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அங்கீகாரத்துக்காக நேற்று (26) அனுப்பி வைக்கப்பட்டதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின், முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் மீது கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி சபையில் விவாதம் நடைபெற்றது. இதன் பின்னர் இரண்டு மாதங்கள்...
'எனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கொழுவல் இருப்பது உண்மை' என்று வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (25) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'எனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் ஏற்பட்டு, அதனால் கொழுவல் ஏற்பட்டது உண்மை. அதனை நான்...
செய்தியை செய்தியாக பிரசுரியுங்கள் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்று வியாழக்கிழமை (25), கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'கடந்த மாகாண சபை அமர்வின் போது ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன்...
நேற்றையதினம் (வியாழக்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கிளிநொச்சி மாவட்டத்துக்கு பயணம் செய்து கிளிநொச்சி பொதுச் சந்தையையும் கனகபுரத்தில் முன்னர் கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தையும் பார்வையிட்டார். இதன்பின்பு அவர் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது, நான் ஒரு அமைச்சர் கிடையாது, நான் ஒரு ஆளுநர் அதாவது ஜனாதிபதியின் ஒரு தூதுவர். இந்த வருடம்...
இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்குமென கூட்டமைப்பின் தலைவர் கூறுகின்றார். அதை நாங்களும் நம்புகின்றோம். தீர்வு கிடைக்காவிடினும், இனவாதம் பேசமால் எமது தீர்வுக்கான திட்டங்களை வடமாகாண சபை நடைமுறைப்படுத்த வேண்டுமென என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண சபையின் 60 வது அமர்வு இன்றுநேற்று வியாழக்கிழமை நடைபெற்றது போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே...
ஆயுதம் ஏந்தினோம் அது மௌனிக்கப்பட்டு விட்டது. ஆனால், எமது போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். நல்லைக்குமரனின் 24வது மலர் வெளியீட்டு விழா நிகழ்வு யாழ்.நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,...
வட மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வை, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்....
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போட்டப்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட உள்ள சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு ஆலோசனை வழங்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த குழுவை நியமித்துள்ளார். வட மாகாண சுகாதார அமைச்சர் பீ. சத்தியலிங்கத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடாத்தப்பட்டால் அது முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை ஆளுநருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும்...
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை மருத்துவக்குழு முன்னாள் போராளின் உடல்நிலையைப் பரிசோதிக்க மறுத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தடுப்பு முகாம்களில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி மற்றும் விசம் கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், 59 ஆவது வடமாகாண சபை அமர்வின்போது முன்னாள் போராளிகளின்...
சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி இயக்க உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும், அதனால் பலர் சந்தேகத்துக்குட்பட்ட முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளனர் எனக் கூறி வடமாகாணசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு ஆகும். இப்படி சுமார் 105 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் ஒரு தகவல் கூறப்பட்டது....
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம்...
Loading posts...
All posts loaded
No more posts
