Ad Widget

வடக்கு முதலமைச்சர் நிதி சட்டம் மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட வடக்கு முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அங்கீகாரத்துக்காக நேற்று (26) அனுப்பி வைக்கப்பட்டதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின், முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் மீது கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி சபையில் விவாதம் நடைபெற்றது.

இதன் பின்னர் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலேயே ஆளுநரின் அங்கீகாரத்துக்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னைய ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறிக்கு 2014ஆம் ஆண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கு அவர் அங்கீகாரம் வழங்கவில்லை. தொடர்ந்து வந்த ஆளுநர் பளிகக்காரவும் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை.

இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts