புகையிரதப் பாதைகளில் நடப்பவர்களுக்கு அபராதம்!

புகையிரதப் பாதைகளில் நடப்பவர்களுக்கு எதிராக இன்று திங்கட்கிழமையிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் நடந்துசெல்பவர்களினால் கடந்த காலங்களில் அதிகளவான உயிராபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், ரயில் பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு இன்று முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா...

சுபநேரத்தில் கொலை: பூசாரி கைதானார்

ளத்சிங்கள ஹல்வத்துரே பத்திரகாளியம்மன் கோவில் பொறுப்பாளரான ஏ.ஏ. சோமதாஸவை (80) படுகொலைசெய்தனர் என்ற குற்றச்சாட்டில், அந்தக் கோவிலின் பூசாரியும் மட்டக்குளியைச் சேர்ந்த பழைய இரும்புகளைச் சேகரிக்கும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையைச்செய்வதற்கு சுபநேரம் பார்க்கப்பட்டதாகவும் அந்நேரத்திலேயே சாக்கொன்றினால் அவருடைய முகத்தை மூடிய சந்தேகநபர்கள், கழுத்தைத் திருகி அவரைப் படுகொலைசெய்துள்ளனர். படுகொலைசெய்யப்பட்டவர் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார். இந்தப்...
Ad Widget

2 பேர் மரணம்; மூவர் மாயம்; 7,090 பேர் பாதிப்பு

வீதிகளில் காட்டாறு கரைபுரண்டது தலைகாட்ட விடாது பேய் மழை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு 30 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டன நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22ஆம்...

அனர்த்தம் ஏற்படின் உடன் அறிவிக்கவும்!

சீரற்ற காலநிலை காரணமாக அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படின் உடனடியாக அறியத்தருமாறு, அரசாங்க பாதுகாப்பு பிரிவு மக்களிடம் கோரியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் பொருட்டு விஷேட தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. இராணுவம் - 011 2 434 251...

கட்டுநாயக்கவில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் கொச்சின், மத்தலவுக்கு அனுப்பி வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள் இந்தியாவின் கொச்சின் மற்றும் மத்தல ஆகிய விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இலங்கை காவல்துறைக்கு எதிராக 6 மாதங்களில் ஆயிரம் புகார்கள்

இலங்கையில் கடந்த 6 மாதக் காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணையத்தின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார். பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பக்கச்சார்பாக நடத்தல் ஆகியவை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். பொலிஸாருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள...

இரு கோவில்களின் விக்கிரகங்கள் மணலினுள் புதைப்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள அகோரமாரியம்மன் கோவிலிலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள பழம்பெரும் பிள்ளையார் கோவிலிலும் இருந்த விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் தகர்த்து எடுக்கப்பட்டு அவ்விக்கிரகங்கள் தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவிலில் இருந்த நாகதம்பிரானின் ஏழு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!

"நாட்டை சூறையாடிய பயங்கரவாதிகளை மே 18இல் நினைவுகூர வடக்கு மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசும் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது." - இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மே 18ஆம் திகதி முள்ளிவாய்காலில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல்...

முள்ளிவாய்க்காலில் சரணடைந்தோரை சர்வதேசமோ ஜெனிவாவோ பாதுகாக்க முன்வரவில்லை!

இறுதியுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் சரணடைவோரை பாதுகாக்குமாறு ஜெனீவா உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளிடம் உதவிகோரியபோது எவரும் உதவி வழங்க முன்வரவில்லை என அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் தொடர்பில் முழுப்பொறுப்பையும் பசில் ராஜபக்சவே ஏற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் மீது உண்மையான...

இது அனைவருக்கும் ஒரு பாடம்!

கடவத்த, கோப்பியவத்த பகுதியில் கைத்தொலைபேசியைப் பாவித்துக்கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் கிரிவெல்ல மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கல்வி கற்றுவந்த, குடும்பத்திற்கு ஒரே ஆண் மகன் ஆவான். குறித்த சம்பவம் தொடர்பில் இறந்த மாணவனின் சகோதரி கூறுகையில், தம்பி எப்போதும் கையடக்கத்தொலைபேசியை கைகளில் வைத்துக்கொண்டே இருப்பான். அவன் யார் சொன்னாலும்...

பசிலின் மனைவிக்கும் மகளுக்கும் அழைப்பு

மாத்தறையில் காணியொன்றைக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மாத்தறை நீதிமன்ற நீதவான் யுரேஷா டி சில்வாவினால், கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில், கொழும்பிலுள்ள நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, அவர் நேற்று வியாழக்கிழமை அழைக்கப்பட்டிருந்தார். அப்பிரிவுக்கு...

நாடு முழுவதும் அதிகளவிலான மழை பெய்யலாம்?

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும், கடலோரங்களிலும் இன்று(13) அதிகளவிலான மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, மற்றும் தென்பகுதிகளில் மழைக்கான காலநிலையுடன் மேகமூட்டம் காணப்படுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மாலையிலும் இரவு வேளையிலும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய...

வடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை...

பசில் ராஜபக்ஷ கைது!!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகி போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடூர பகிடிவதை- இடைநடுவில் கல்வியை கைவிட்ட மாணவி!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவியொருவர் தான் முகம் கொடுக்க நேர்ந்த கொடூர பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக படிப்பை இடைநடுவில் கைவிட்டுள்ளார். இணைந்த சுகாதாரத்துறை பாடநெறியொன்றை கற்பதற்காக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான புதிய மாணவியொருவரே இவ்வாறு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளார். பகிடிவதை காரணமாக குறித்த மாணவி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை குறித்து அறிந்து கொண்டவுடன் பேராதனை...

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்யக் கோருகிறது அமெரிக்கா!

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்கள், பால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்ளிட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கத் தூதரகத்தில் வைத்து, ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்கான ஈகுவல் கிராவுன்ட் இலங்கை அமைப்பின்...

இலங்கையில் கஞ்சா செய்கை! ஏற்றுமதி செய்யவும் முடிவு!

ஆயுர்வேத மூலிகையாக இலங்கையில் கஞ்சா உற்பத்திசெய்யப்போவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ஆயுர்வேத மூலிகை மருந்து உற்பத்திகளை அறிமுகம் செய்யும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கலந்துகொண்டார். இதன்போதே போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்....

எம்மைக் கொல்ல தீவிரத் திட்டம்

தான் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதற்குத் தீட்டப்பட்ட திட்டம், செயற்படுத்தப்படுகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதெனவும், உயிர்தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்திருந்த கருத்திலிருந்து, இந்தச் சதித்திட்டம் தொடர்பிலான கருத்து, அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பணியாட்...

மஹிந்தவும் சகாக்களும் விரைவில் கைதாவர்!

"மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகாக்களான மோசடிக்கார கும்பல் விரைவில் கைதாகும்"இவ்வாறு அரசு நேற்று புதன்கிழமை அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது. "மஹிந்த ராஜபக்‌ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே, அவர் தன்னை கறை படியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல...

மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து! இராஜதந்திரிகளிடம் முறையிட்டுள்ளோம்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் கூட்டு எதிரணியினர் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிடம் முறையீடு செய்துள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து தங்கள் நாடுகளிடம் தெளிவுபடுத்துமாறு கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிடம் கேட்டுள்ளார் என...
Loading posts...

All posts loaded

No more posts