- Monday
- November 24th, 2025
மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின்...
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த காலங்களில் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமித்திருந்த 29 பேரை அந்தப் பதவிகளிலிருந்து திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை, இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையை இலங்கை அரசாங்கம் இன்னும் முறையாக மீளத் தொடங்காதுள்ள சூழ்நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு சட்டவிரோதமாக இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக புதிய துணை...
முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் இணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவர் தங்கியிருந்த வீட்டிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஆவணங்கள் அடங்கிய 19 கோணிப் பைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த பைகளில் பயில்கள் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஹோரண தெரிவித்துள்ளார். மினுவன்கொட – வடினாபஹ பகுதியில்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இருக்கும் கட்சிகள் வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றன. இந்தக் கூட்டணி பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயன்படுத்திய வெற்றிலை சின்னத்தையே தமது சின்னமாகப் பயன்படுத்தவும் விரும்புகின்றன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர...
"ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இராணுவம் மூலம்ஆட்சியைத் தக்க வைக்க மஹிந்த ராஜபக்ஷ சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டை என்னால் முழுமையாக நிராகரிக்க முடியாது. ஏனெனில், கொழும்பில் முக்கிய பகுதிகளில் இராணுவ குவிப்பும் ஒரு சில பகுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர் எனவும் நான் அறிந்தேன். இது தொடர்பாக பொதுமக்கள் பலர் எனக்குத்...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மஹேந்திரன், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார். நேற்று மாலை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வ கடிதத்தினை அன்ஜுன மஹேந்திரனிடம் ஜனாதிபதி கையளித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்னும் 6 நாட்களில் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமானவை எனக் கருதப்படும் 53 வானங்கள் புறக்கோட்டைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவை நேற்றிவு ஸ்ரீஜெயவர்த்தனபுர களஞ்சியசாலையில் இருந்து மீரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமானதென அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமற்போயுள்ளன ஜனாதிபதி செயலகத்துக்குச்...
என்னுடைய மாதந்த சம்பளம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை நான் பெறமாட்டேன். அவற்றை வீடு அபிவிருத்தி நிதியத்தில் வைப்பிலிடுவேன் என்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் தன்னுடைய கடமைகளை நேற்று வியாழக்கிழமை (22) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லாட்சிக்கு முன்மாதிரியாகவே இதனை...
நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்),...
கிழக்கில் முதலமைச்சர் பதவியைக் கோரும் கூட்டமைப்பின் கருத்து நியாயமானது! – மைத்திரி, ரணில் தெரிவிப்பு
"தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் - அதிக உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நாம் தெளிவாக எடுத்துரைத்தோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - தேர்தல் காலத்தில்...
புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து தனியார் பஸ்கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பஸ் கட்டணங்கள் 7 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதன்பிரகாரம் ஆரம்பக்கட்டணம் 8ரூபாவாகும்
"ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை புலிகள் கொன்றனர் என்பதில் சந்தேகம் இருக்கிறது" இப்படி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: "அரசியல்வாதிகளான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன்,...
மத்தல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்களிலுள்ள அனைத்து வரியற்ற வர்த்தக நிலையங்களினதும் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யுமாறு விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பைஸார் முஸ்தபா உத்தரவிட்டுள்ளார். அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 'முன்னைய காலங்களில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது...
காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்கும் மகநுவர என்ற கப்பலில் இருந்து பல்வேறு ரகங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர். தமது மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதக் களஞ்சியசாலை நடத்திச் செல்லப்பட்டதாக கடற்படையும் உறுதிப்படுத்தியது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இதன் பின்னரே கருத்து வெளியிட முடியும் எனப் பாதுகாப்பு...
புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைஇராஜினாமாச் செய்துள்ளார். தற்பொழுது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு...
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள 'ரக்ன லங்கா' எனப்படும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையில் குளறுபடி காணப்படுவதால், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேற்படி நிறுவனத்துக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். மேற்படி களஞ்சியசாலையிலுள்ள 23 கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது...
இலங்கையின் புதிய பிரதமர், ரனில் விக்ரமசிங்க, அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பகிர்வை விஸ்தரிக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறார். சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்ட விரிசல் சுமார் 30 ஆண்டுகால உள்நாட்டுப்போராக வழிவகுத்ததற்கு ஒரு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வாக அவர் தமிழ் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப் பரவலை விஸ்தரிக்கப்...
Loading posts...
All posts loaded
No more posts
