இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

இலங்கையில் சட்டத்துறைக்கு சட்டத்தரணிகளை உருவாக்கி வரும் 152 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமைமிக்க இலங்கை சட்டக் கல்லூரி, நவீன சட்டக் கல்வியை நோக்கி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS), மாணவர் மேலாண்மை அமைப்பு (SMS) மற்றும் புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றின்...

டெங்கு மரணங்கள் 56 ஆக உயர்வு!!

டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 77,000 ஐ கடந்துள்ளது
Ad Widget

மாகாண சபை தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவத்தை 33% ஆக அதிகரிக்க யோசனை!!

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில்...

இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!

நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல...

குவைத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இடைநிறுத்தம்!!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு...

பாலின மாற்றத்திற்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த...

வரி ஏய்ப்பு செய்தால் சிறை நிச்சயம்! விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை!

குறிப்பிட்ட வருமான வரிப் பொறுப்புகளைத் திட்டமிட்டு நிறைவேற்றத் தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் திருத்தச் சட்டத்தின் மூலம், அதற்கான அதிகாரம் உள்நாட்டு இறைவரித் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. வருமான...

ரயிலில் செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து படுகாயம்!!

ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். நேற்று (19) முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய ரயில் பயணித்தின் போது ​குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட...

நாட்டில் இதுவரையில் 18 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக...

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (16) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 73,455 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் 50 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மர்மமான முறையில் மரணம்!!

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி. டி. விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தற்கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய சி. டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35ஆவது...

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் கவனத்திற்கு!!

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் (2026) வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையவழியில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்றத்திற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் நேற்றைய தினம் 16ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க...

ஜனாதிபதி அநுர மீதான மக்கள் நம்பிக்கை 75.5%!!

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் ஆராய்ச்சிப் பிரிவான சமூகக் குறிகாட்டி இணைந்து நடத்திய அண்மைக்கால “ஜனநாயக ஆட்சியில் நம்பிக்கை பற்றிய சுட்டெண்” என்ற பொதுஜன கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தனிப்பட்ட நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீதான...

நீர்கொழும்பு சிறை மோதலுக்குப் பின்னால் சதித்திட்டமா?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயல்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பழைய...

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை...

பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

கடந்த 2025ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், இலங்கையின் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் அனைத்து வகையான சலுகைகளையும் வழங்கும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 2015ஆம்...

அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவித்தல்!!

அனைத்து அரச ஊழியர்களும் தங்களது அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதற்கமைய, பயளாளிகள் அனைவரும் தங்களது விபரங்களை விரைவாக புதுப்பிக்குமாறு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் கலாநிதி விஷாகா வனசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். ஓய்வூதியத்திற்கு தகுதிபெற்ற அரச மற்றும் மாகாண அரச சேவையைச்...

ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு???

ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தற்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், அந்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மீரிகம வைத்தியசாலையின் புதிய சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்குக்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்கியது!!

நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (13) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 69,951 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கடந்த 12 ஆம் திகதி வரை பதிவாகியிருந்த...

நீர்கொழும்பு சிறை மோதல்: மேலும் 2 அதிகாரிகள் உயிரிழப்பு!!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts