- Monday
- July 13th, 2026
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய தற்கொலைக்குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தான் தன் மதத்திற்காக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளார். இயேசுபிரானின்...
கொழும்பு புறக்கோட்டை பஸ்தியான் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெட்டோனேற்றர் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்றது. மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் குறைந்தளவு அமுக்கத்தையுடைய இந்த வெடிமருந்துகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துக்காக பேருந்து நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் கூறினர்.
இவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது...
தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த குள்ள மனிதர்கள், மக்களைத் தாக்கிவருவதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில், மாத்தறை மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) குள்ள மனிதர்கள் தங்களை தாக்கியதாக சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடுகளைப் பதிவு செய்துள்ளனர். மாத்தறை, தொட்டமுன பகுதியைச் சேர்ந்த...
பதுளை ஹாலில வெலிமட மற்றும் பசறை பிரதேசங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) காலை இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் இதன் காரணமாக மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
25 வருடங்களாக ரயில்களில் பிச்சை எடுத்து 3 வீடுகள் கட்டிய ஹம்காவை வசிப்பிடமாக கொண்ட 65 வயதுடைய கண்தெரியாத முதியவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்படும் போது வங்கி கணக்கில் 5 இலட்சம் ரூபாவும் வைத்திருந்துள்ளார். ஹம்பகா- கொழும்பு கேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் ரயில் பயணிகளிடம் பணத்தினை...
யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் லியனாராச்சிகே அபயரத்ன தெரிவித்துள்ளார். குறித்த தொகை கருணா தரப்பினருக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ரவிராஜ் கொலை...
மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில், சிங்கள மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் குறித்த சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ்மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும்...
புலிகளுக்கு எதிரான யுத்தத்தினால் அங்கவீனமடைந்த பொலிஸாருக்கான பதவியுயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் எழுப்பிய ,யுத்தத்தினால் அங்கவீனமடைந்த பொலிஸாருக்கான பதவி உயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்பு என்பன வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான...
இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றி எண்ணெய், மரக்கறி எண்ணெய் கலந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதா கவும் இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாக ஆய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில் வாணிப பிரதி அமைச்சர் புத்திக பதிரண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பால்மா மாதிரிகளை தனியார் நிறுவனமொன்றுக்கு...
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரான ரோஹித ராஜபக்ஷவுக்கு இன்று (24) திருமண பந்தத்தில் இணைந்தார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களில் மூன்றாமவரான ரோஹித்த ராஜபக்ஷவுக்கும் டட்யனா லீ ஜயரத்னவுக்கும் (Tatyana Lee Jayaratne) இடையில், மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரான தங்காலை வீரகெட்டியவில் இடம்பெற்ற இவ்வைபவம், இறுதி வரை மிக...
இலங்கையின் 71 ஆவது சுதந்திரதினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆம் உறுப்புரைக்கமையவே இவ்வாறு கொண்டாப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அமைச்சர் இதனை...
புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார்....
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, விசாரணைக்குழு அங்கு செல்லவுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழு இன்று (வியாழக்கிழமை) அங்கு செல்லவுள்ளது. கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பில் பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கைதிகள் முழந்தாளிடப்பட்டு, பொலிஸார் அவர்களை துரத்தி துரத்தி...
ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடன், ஜனாதிபதி ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலை மைத்திரிபால சிறிசேன எதிர்வரும்...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அரசியலமைப்பு வரைவுத் திட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபைக்கு அடுத்த வாரமளவில் கையளிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன்போது அரசியல் அமைப்பு குறித்த பரிந்துரைகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை பிரதமர்...
தெஹிவளை பொலிஸ் வலயத்தில் குடியிருப்பாளர் பதிவை உடன் நிறுத்த நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் கிரிஷாந்தவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு இனிமேல் அங்கு பதிவு நடவடிக்கைகள் நடைபெறாது. சிங்களத்திலோ, தமிழிலோ எந்த மொழியில் படிவங்கள் வந்தாலும் படிவங்களை எந்த மொழியிலும் நிரப்பி கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதை மீறி பொலிஸ்...
பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களை பதிவுசெய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை பொலிஸாரினால் நேற்று (வியாழக்கிழமை) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் காணப்பட்ட நிலையில், தமிழ் மொழியிலான விண்ணப்பங்களை மக்கள் கோரிய போதிலும் தற்போதைக்கு ஒரு மொழியிலேயே விண்ணப்பங்கள் காணப்படுவதாகவும்...
இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் கடந்த ஆறு வாரமாக நீடித்த நெருக்கடி நிலைமை நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுக்கமான தீர்மானத்திலிருந்து விலகி, நாடாளுமன்றின் பெரும்பான்மைக்கு இணங்க ரணில்...
Loading posts...
All posts loaded
No more posts
