டெங்கு அச்சுறுத்தால் மொறட்டுவை பல்கலைக்கு இரண்டு வாரம் பூட்டு!

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காரணமாக, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு வார காலத்திற்கு மூடப்படும் என்று துணைவேந்தர் அறிவித்தார். இதற்கு அமைவாக, பல்கலைக்கழக நிர்வாகம், நேற்று (6) முதல் அமுலுக்கு வரும் வகையில், வளாகத்திற்குள் நடைபெறும் செயல்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோயால் 40 பேர் உயிரிழப்பு???

நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோயால் 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கூறப்படுவதைப் போன்று 40 பேர் சிறைச்சாலைக்குள் டெங்கு நோய்க்குள்ளாகி உயிரிழந்திருந்தால்,...
Ad Widget

இலங்கை சுங்கத்தின் அபார சாதனை!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாய் வரி வருவாய் வசூலித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறினார். இந்த ஆண்டுக்கான வரி இலக்கு ரூ. 2,206.9 பில்லியன் ஆகும்....

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நேற்று (06) இரவு நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமையை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்...

சிறைச்சாலை மோதல்: களமிறங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதற்கமைய, அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (5) கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் நேற்றைய தினமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) அச்சிறைச்சாலையில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதைத் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 பேர் ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,...

பஸ் கட்டண திருத்தம் இன்று முதல்!!

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று (06) முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 34...

போதைப்பொருள் பயன்படுத்துவதை பெற்றோர் பரிசோதிக்க பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்த அரசு பரிசீலனை

போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர் வீட்டிலேயே பரிசோதிக்க புதிய பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்த அரசு பரிசீலனை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தங்களது பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை பெற்றோர் தனிப்பட்ட முறையில் பரிசோதிக்கக்கூடிய பரிசோதனைக் கருவிகளை (Drug Testing Kits) சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்த முன்மொழிவு,...

முன்னாள் கடற்படைத் தளபதி கைதாகி பிணையில் விடுதலை

முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட, 2006 ஆம் ஆண்டு யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார். கைதுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்தப் பதவிக்குத் தேவையான தகுதிகள் இல்லாத...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57000 ஐ கடந்தது!!

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,668 ஆக உயர்ந்துள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,253 டெங்கு நோயாளர்கள்...

யோஷித ராஜபக்‌ஷவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (3)...

பிள்ளைகள் போதைக்கு அடிமையா? — பெற்றோரே வீட்டில் சோதிக்கும் புதிய வசதி விரைவில்!!

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது. நச்சுப் போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டுச் சபை,...

உலகின் சிறந்த சுற்றுலாத் தீவாக இலங்கை!!

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான 'பிக் 7 டிராவல்' (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த...

முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வௌியான தகவல்!!

அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் 3,108,805,000.00 ரூபாய் பணம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70...

இணையவழியில் நீதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடிகள் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....

போதைப் பொருள் அச்சுறுத்தல் : பாடசாலைகளைப் பாதுகாக்க 225 விசேட திட்டங்கள்!!

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி...

எனது மனைவியின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்!! – கண்ணீருடன் கணவர்

எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்" தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

பதின்ம வயதினரிடையே பாலியல் நோய் அதிகரிப்பு!!

பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அரசாங்கம்...

செல்லப் பிராணிகள் தொடர்பில் அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்

விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் செல்லப் பிராணிகளை பதிவு செய்தல் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்திற்கு, சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் அதனை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்றில் முன்வைப்பதற்குமான யோசனை ஒன்றை பொது நிர்வாகம், மாகாண சபை...

நீர் கட்டணம் தொடர்பில் அரசு எடுத்த முடிவு!!

இந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு பணிகளுக்காக சபைக்கு பெரும் செலவு ஏற்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை...
Loading posts...

All posts loaded

No more posts