தனியார் துறை ஊழியர்கள் இணைய வழியில் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்காக அண்மையில் இணையவழி பருவச்சீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
”ரயில் பருவச்சீட்டுகளைப் பெறுவதற்கு பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன், பணியிடங்களில் இருந்து கடிதங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் காணப்பட்டது.
ரயில் சேவையில் இன்னும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன . மேலதிக ரயில்கள், நேரத்தைப் பேணும் சேவை மற்றும் ரயில்களுக்குள் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தேவைப்படுவதாக பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.