Ad Widget

உயிா்த்த ஞாயிறு தாக்குதல்: 200 சிறுவா்கள் பாதிப்பு!! செஞ்சிலுவை சங்கம் அதிா்ச்சி தகவல்!!

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் சுமாா் 200 குழந்தைகள் தமது குடும்ப உறுப்பினா்களை இழந்துள்ளனா். என செஞ்சிலுவை சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொழும்பில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலினால், 200 சிறுவர்கள் தங்களின் குடும்பத்தினரை இழந்துள்ளனர். மேலும் சிலர், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

75-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள், படு காயம் அடைந்துள்ளதால் அவர்களால் தங்களின் குடும்பத்தைச் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலர், தங்களின் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

அதனால், அவர்களின் மொத்த வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், பலருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தினால் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள்,

குண்டு வெடிப்பில் சிக்கி மீண்டவர்கள் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு உளவியல் முதலுதவி தேவைப்படுகிறது. அவர்கள் இன்னும் அந்தத் தாக்கத்திலிருந்து வெளிவரவில்லை. தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரும், தங்கள் வாழ்வை எதிர்கொள்ள பல சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts