- Sunday
- August 10th, 2025

இந்த திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை தனது இணையத்தளம் ஊடாக நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. பயணிகள் தாம் பயணிக்க விரும்பும் மாவட்டத்தைத் தெரிவு செய்து தமது ஆசனத்தை முற்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத்தை இணையம் ஊடாக செலுத்தும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இணையத்தள முகவரி வருமாறு: https://sltb.express.lk/

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அதிகரிக்கப்படுகின்றன. வாகான புகைப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தவறினால் 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என புதிய போக்குவரத்து விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அந்தச் சான்றிதழ் வாகன வரி அனுமதிப் பத்திரம்...

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார். வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்துவதற்கான தண்டப்பணம் ரூபா 25 ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகுமம் அவர்...

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் வடக்கில் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். குறித்த சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தவகையில் வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளது. இதில் யாழ்ப்பாணத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும்,...

எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர்கள் தமது வாக்குரிமை பத்திரத்தை பூரணப்படுத்தி கிராம சேவையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென தேர்தல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலின்போது தமது வாக்குரிமையை உறுதிசெய்யும் பொருட்டு குறித்த வாக்குபத்திரத்தை விரைவாக பூரணப்படுத்தி கையளிக்குமாறு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வாக்காளர் பதிவேற்றில் பெயரை பதிவுசெய்ய...

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 6 வயதுச் சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பை நடத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுழிபுரம் பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் தற்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை யாழ்ப்பாண மாவடத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடையைப்பை நடத்த...

போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியுமென போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டப் பணத்தை 14 நாட்களுக்குள் தபாலகங்களில் செலுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. எனினும் தபால் ஊழியர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பணத்தை செலுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கையாக தண்டப்...

திர்வரும் 20/06/2018 புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ” அபிவிருத்தி உதவியாளர் நியமனம் ” தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் அபிவிருத்தி உதவியாளருக்கான நேர்முகத்தேர்வை எதிர் கொண்ட வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்...

முச்சக்கர வண்டிகள் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்திலேயே பயணிக்க முடியும் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளுடனான போக்குவரத்துத்து விதிமுறைகள் இந்தவாரம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. “இந்த ஆண்டின் முதல் 120 நாள்களில் முச்சக்கர வண்டி சாரதிகளின் பொறுப்பற்ற சாரதியத்தால் 117 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அதுதொடர்பில் போக்குவரத்து அமைச்சு கவனம்...

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத் தக்கது. இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்” இவ்வாறு வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்தார். குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் இளைஞர்களின் நடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைக்கவில்லையாயின் தனது கவனத்துக்கு கொண்டு...

இந்துமத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று (13) புதன்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அரசால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் சைவ சமயிகள்...

018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை (பிசி படிவம்) துரிதமாக முழுமை செய்து, கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை கிராம அலுவலர்கள் தற்போது வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி இப்போது 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக தேர்தல்கள் செயலகம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் முன்னெடுத்துச் செல்ல சிறப்புக் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் அங்கத்துவம் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அவர் கோரியுள்ளார். இதுதோடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை...

தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா, தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? அவை தொடர்பில் அறிவிக்குமாறு அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் மக்கள் தமது மொழி தொடர்பில் இழைக்கப்படும் தவறுகளை...

தமிழ் மக்கள் பேரவையால் இளையோர் மாநாடு நடத்தப்படுவதற்கான காரணங்களை அதன் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பட்டியலிட்டு எடுத்துக் கூறினார். இதுதொடர்பில் யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விளக்கத்தை வழங்கினார். அவர் தெரிவித்ததாவது: உங்கள் யாவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய...

வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தமக்கான வீட்டுத்திட்டம் போன்ற உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள் உள்பட வேறுவேறு இடங்களில் தங்கியிருப்போர் மற்றும் மீள்குடியமர்ந்தோர் தமக்கான உதவித் திட்டங்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்பட வேண்டிய காலப்பகுதியே...

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள மாவட்டங்கள் என இலங்கை நோய்தொற்றியல் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய 12 மாவட்டங்களில் டெங்கு...

பாடசாலை மாணவர்களுக்கெதிரான வன்புணர்வுகள் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டுமென்பதுடன், விழிப்புணர்வுகளை அடைய வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அண்மைக்காலமாக பாடசாலை மாணவிகள் மீதான வன்புணர்வுகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்...

நாடு முழுவதும் பரவிவரும் இன்புளுவென்ஸா வைரஸ் நோய் தொற்றினால், இதுவரை அரச வைத்தியசாலைகளில் நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கியமாக தெற்கில் பரவும் குறித்த இன்புளுவென்ஸா நோய் தொடர்பில் மக்களுக்கு முறையான விளக்கமளித்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நோய் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உயிர்ச்...

தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த 22.05.2018 அன்று காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். குறிப்பாக இப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள்...

All posts loaded
No more posts