- Monday
- November 10th, 2025
இரணைமடுக் குளத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதன் ஆறு வான் கதவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசத் திணைக்களம் கேட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப்...
பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், நாட்டின் பல மாவட்டங்களில் இன்புலுவன்ச வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இடைவிடா காய்ச்சல், இருமல், வாந்தியெடுத்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரின் சோதனையைப் பெறுமாறு ஆலோசனை வழங்கியுள்ள சுகாதார அமைச்சு, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகக்...
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். சைவபரிபாலனசபையால் நடாத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பால பண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை (இந்துசமயம் அல்லது இந்துநாகரீகம் உட்பட) சித்தி அல்லது சைவசமய...
பெறுமதியான பரிசில் உங்கள் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கைவைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர் வழங்கி முறைப்பாடு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று சூறாவளிகள் இலங்கையைத் தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். இலங்கைக்குக்கு தென்கிழக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் உருவாகியுள்ள இந்த சூறாவளிகள் வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையைத் தாக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில்100 மில்லிமீற்றர்...
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாத்தறை முதல் திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் வரையிலான கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டல...
தூங்கும் அறையில் கைபேசி பாவிப்பது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரம் அறையில் கைத்தொலைபேசியை வைத்திருப்பது கடும் சுகாதார பாதிப்புக்கு காரணாமாகும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. “கைபேசி மற்றும் கணினி தொடர்பான உபகரணங்களில் அதிகம் நேரம் செலவிடுவது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. தூங்கும் அறையில் கைபேசி வைத்திருப்பது மூளை மற்றும் நரம்பு தொகுதிகளுக்கு பாதிப்பை...
அனுராதபுரம் சிறைச்சாலை தமது விடுதலையை கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு ஏற்ப இந்த...
தியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் தியாகி திலீபனின் 31 ஆவது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்குமான அழைப்பை இக்கட்சி அறிக்கையூடாக விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயக அரசியல்...
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இயக்குனர், வைத்தியர் சமித்தியே வைத்தியர்கள் சார்பில் பின்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாளாந்தம் ஆறு லீற்றர் நீர் அருந்த வேண்டும் என தெரிவித்துள்ள அவர் தற்போது அதிக வெப்ப...
செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 22ஆவது ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கிருஷாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன்போது நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. செம்மணி படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் 50 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற...
சம்பளப் பிரச்சினை உள்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச. ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு வடக்குப் பேருந்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதையடுத்து வடக்கில் இன்று இ.போ.ச. பேருந்துச் சேவைகள் முடங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பளப் பிரச்சினை உள்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெற்கில் இ.போ.ச. ஊழியர்கள் நேற்றுமுன்தினம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தனர். எனினும் நேற்று வடக்கு...
யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைக்கு தொந்தரவு செய்யும் குற்றவாளிகளைக் கைது செய்ய ஆதரவை வழங்குமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய குடாநாட்டில் அதிகளவில் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் நேற்றையதினம் பொலிஸாரினால் விநியோகிக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’-இன் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, முல்லைத்தீவு மாவட்ட தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள், கலை, கலாசார, பண்பாடுகள் சிதைக்கப்படுவதை...
வாள்வெட்டுக் கும்பல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தமக்கு நேரடியாகத் தகவல்களை வழங்கி உதவுமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ கேட்டுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை இரகசியமாக தொலைபேசியிவோ அல்லது நேரடியாகவோ தெரிவிக்குமாறு, அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் தலையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) நடைபெற்ற...
நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டமாக காணப்படக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மத்திய மற்றும்...
முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35–70க்கும் இடைப்பட்டதாக காணப்பட வேண்டுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சட்டம் 2081/44 ஆம் இலக்க விசேட வர்த்தமானி ஊடாக விலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுகொண்ட ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் ஓட்டும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சாரதிகளுக்கான தகைமைகளை முழுமைப்படுத்தியவர்கள், வைத்திய பரிசோதனை அறிக்கை மற்றும்...
யாழில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களும் தங்களின் ஆதரவினை முழுமையாக வழங்க வேண்டுமென வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோ பொதுமக்களிடம் இன்று (சனிக்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த செயற்பாட்டுக்கு மக்களும் தங்களது முழு பங்களிப்பினை வழங்குவார்களாயின் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய உதவியாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
