Ad Widget

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

சைவபரிபாலனசபையால் நடாத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பால பண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை (இந்துசமயம் அல்லது இந்துநாகரீகம் உட்பட) சித்தி அல்லது சைவசமய அறிவு அனுட்டானங்களை அநுட்டித்து வரும் 40 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முடியும்.

சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் கீழ்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் அல்லது இளஞ்சைவப்புலவர் தேர்வு அல்லது சித்தாந்தபண்டிதர் தேர்வு (சைவபரிபாலனசபை) அல்லது பண்டிதர் தேர்வு (ஆரிய திராவிடபாசா விருத்திச்சங்கம்) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 100 ரூபா செலுத்தி விதிகள் பாடத்திட்டத்துடன் விண்ணப்பபடிவத்தினை பெற்று பரீட்சை கட்டணமாக 500 ரூபாவினை கொக்குவில் தபாற்கந்தோரில் பெறத்தக்கதாக காசுக்கட்டளையை தலைவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் என்னும் பெயருக்கு எடுத்து எதிர்வரும் 31.12.2018 இற்கு முன்பாக சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இல 153 கே.கே.எஸ்.வீதி கொக்குவில் என்னும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும். பிந்திய விண்ணப்பங்கள் மேலதிக அறவீட்டுக்கட்டணம் 100 ரூபாவுடன் 31.01.2019 வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதற்குப்பிந்திய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பரீட்சைகள் சித்திரை மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும். பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் சித்திரை மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பதாரிகளின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக விடயங்களினை 0212223458, 0776132176 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். என அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன் அறிவித்துள்ளார்.

Related Posts