- Friday
- August 29th, 2025

இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ்வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார். காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை...

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நான்கு நபர்களால் கடத்தப்பட்ட முன்னாள் போராளி வீடு திரும்பியுள்ளார். சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த புதுக்குடியிருப்பை வதிவிடமாக கொண்ட பெண் போராளியே, முன்பள்ளிக்கு செல்லும் போது நேற்றுமுன்தினம் காலை கடத்தப்பட்டிருந்தார். இவர் தற்போது புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடத்தலுடன் தொடர்புபட்டவர்களும் இலங்கை...

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியொருவர் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே முன்னாள் பெண்போராளியான கைவேலி பகுதியைச் சேர்ந்த பெண்ணையே கடத்திச் சென்றுள்ளனர். தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்தார். நேற்றுக்காலை வழமை போலவே முன்பள்ளிக்கு...

வவுனியாவின் எல்லையோரங்களில் இருந்த சிங்கள மக்களையும் மீள்குடியேற்ற வேண்டும் என கூட்டமைப்பு சார்பு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவினில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- நாம் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. எல்லா மக்களையும் ஒன்றிணைத்துச் செயற்பட...

கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் உள்ள குடும்பங்கள் தமது வருமானத்தின் பொருட்டு மேற்கொண்டு வரும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை உரிய முறைகளில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாக கூறுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குடிசைக் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது உற்பத்தி...

முல்லைத்தீவு, முறிகண்டி செல்வபுரம் பகுதியில் சனிக்கிழமை (07) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் லொறியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், சாரதி...

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மருதங்கேணி...

காணாமற்போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (06) காலை 9 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கைது செய்யப்பட்டு காணாமற்போனோர், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் ஒப்படைக்கப்பட்டு காணாமற்போனார் ஆகியோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினர்...

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற பிரச்சினையாகும். இதனை குறுகிய நாட்களுக்குள் தீர்க்க முடியாது. எனது கடமையை நான் உணர்ந்து செல்லும் இடங்களிலுள்ள பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பேன் என மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்புப் ஆகிய பகுதிகளுக்கு...

நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்பரப்பில் புதன்கிழமை (25) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இந்திய மீனவர்களின் றோலர் படகுகள், இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து பாரிய சேதத்தை விளைவித்துள்ளன என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த மீனவர்களில் 150க்கும் மேற்பட்டவர்களின் வலைகளை றோலர்களில் வருகை தந்த இந்திய மீனவர்கள், நாசம் செய்தனர் என்று வடமராட்சி...

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்று புதன்கிழமையுடன் நிறைவு செய்ய வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

கிளிநொச்சி பிரமந்தனாறு நாதன் திட்டப் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை (23) இரவு 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த தர்மரத்தினம் தர்மசீலன் (வயது 32) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கல்லாறு பகுதியிலுள்ள தவறணையில் திங்கட்கிழமை...

மத்திய அரசில் அங்கத்துவம் வகிக்கும் வன்னி அமைச்சரின் அதீத தலையீட்டினால் மீள்குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்காக இந்திய அரசினாலும் வேறு சர்வதேச நிறுவனங்களினாலும்...

தமிழீழ விடுதலைப்புலிகள் தீர்க்கதரிசனத்துடன் தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய அமைப்பாக மாபெரும் ஜனநாயக சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு சென்றுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் நாச்சிக்குடாவில் இடம்பெற்றது. காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது யாழ்....

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு அவரின் மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிக்கா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் அட்டை உள்ளவர்களில் 2500 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டையில்லை என கபே அமைப்பு சுட்டுக்காட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு, கரைத்துறைபற்று இரு பிரதேசங்களிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. எனினும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 2500 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு...

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு பொலிசார் ஊடாக இந்த அழைப்பாணையை கடந்த புதன்கிழமை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்துள்ளனர் என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத...

பிரதேச செயலகங்கள் மக்களின் பணியோடு நின்றுவிடாமல் சமூக பணியுடன் கலை பண்பாடுகளையும் பாதுகாக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற பண்பாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, எமது மாவட்டம் பல...

All posts loaded
No more posts