- Friday
- August 29th, 2025

பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல்லை கொள்வனவு செய்பவர்கள் விலை, நிறை என்பனவற்றில் மாறுபாடுகள் செய்வதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மூடை நெல்லின் நிறை 69 கிலோகிராம் ஆகும். ஆனால் உடன்...

முல்லைத்தீவு, விசுவமடு விவசாயிகள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கித் திறப்பு விழா பொதுமக்களின் எதிர்ப்பால் செவ்வாய்க்கிழமை (10) கைவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் பொதுத்தேவைக்கென கடந்த 1977ஆம் ஆண்டு ஒதுக்கிய 6 ஏக்கர் காணியை, கடந்த 2011ஆம் ஆண்டு விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் அத்துமீறி அபகரித்துள்ளதாகவும் இதனை மீட்டுத்தருமாறு வள்ளுவர்புரம்...

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷாத் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வுகள் வன்னியில் இடம்பெற்று வருகின்றன. நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவுக்கு வருகை தந்த அமைச்சரை 'எமது தலைவரே வருக' என்று எழுதிய பதாதைகளுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய அரசின் கொள்கைகளில் ஒன்றான அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது....

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், கடந்த ஆறு வருடங்களாகக் காணமற்போனவர்களைத் தேடி அவர்களது உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்தும் புதிய அரசு அதுபற்றி அக்கறை காட்டுவதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். காணாமற்போனவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச்...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டப் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரியும், கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியுமே இந்தப்...

கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை அமோக விளைச்சலைப் பெற்றுள்ள நிலையில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (06.02.2015) அறுவடை விழா நடைபெற்றுள்ளது. மத்திய கல்வி அமைச்சால் விவசாய வளாகப் பாடசாலை என அங்கீகாரம் பெற்ற உருத்திரபுரம் மகா வித்தியாலயம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 3...

முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருள்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தச் இடம்பெற்றுள்ளது. ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தார் எனக் கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சோதனை...

தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளுக்கு முதல்நாள் பழையவற்றை எரித்துக்கழிக்கும் போகிப்பண்டிகையை வெகுசிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதேபோன்றுதான் நாமும், பொங்கலுக்கு முதல் வந்த தேர்தலில் பழைய ஜனாதிபதியை எமது வாக்குகளால் எரித்துப் பொசுக்கி அதிகாரத்தில் இருந்து களைந்திருக்கிறோம். புதிய அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை முன்வைக்கத் தவறினால் நாம் இன்னுமொரு போகியைக் கொண்டாடவேண்டிவரும். என்று...

கண்ணகி சிலம்பை வைத்து மதுரையை எரித்தது போல, காணாமற்போனோர் தங்கள் குழந்தைகளுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சிந்திய கண்ணீரே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை இல்லாமல் ஆக்கியதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பொது நூலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற புதிர் எடுத்து பொங்கல் நடத்தும் விழாவில்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் சேதன விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முதற்தடவையாக சேதன விவசாயச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.2015) கரந்தன் இராமு வித்தியாலயத்தில் சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சேதன விவசாயச் சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செறிவு வேளாண்மையில்...

புதிய மைத்திரி அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் விரைவில் பதில் கூற வேண்டும் என்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி காணாமல் போனோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஏ 9 வீதியில் உள்ள...

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே நடத்தப்படவுள்ளன. 2011ஆம் ஆண்டு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் இடைநிறுத்தி...

கிளிநொச்சியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளன. அதன்மூலமாக சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தேசிய அபிவிருத்தி வங்கியின் உதவியில் சுமார் 3.3 பில்லியன் ரூபா செலவில் இந்த இரண்டு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி வள்ளி முனை,புலோப்பளை ஆகிய இடங்களிலேயே காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

உங்களுக்கு இங்கேயே காணி தர நடவடிக்கை எடுகிறோம். எவராவது காணி தருவதாக கூறி அழைத்து செல்ல முற்பட்டால் உடன் எமக்கு அறிவியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தின் மக்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்த போது அம் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றி குறித்த காணியை வேறு திட்டங்களுக்காக...

தற்போது இலங்கையின் பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள - வடமாகாணத்தைச் சேர்ந்த - அரசியல் கைதிகளினதும் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை (29) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி, 'தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர் ஒன்றியம் - வடமாகாணம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இந்த அமைப்பின் தலைவராக கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி செல்லையா பவளவள்ளி (தொலைபேசி இலக்கம் 0774823465),...

முறையற்ற வகையில் அனுமதி பெறப்பட்டு பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நடவடிக்கை வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 'பூநகரி கௌதாரிமுனை பகுதியில் மணல் அகழ்வதற்கான அனுமதி பிரதேச செயலம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை...

வட மாகாண விவசாய அமைச்சால் நடத்தப்பட்ட உழவர் திருநாள் போட்டியில், வட மாகாணத்தில் சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை இராமன் சுதர்சினி என்ற பெண் பெற்றுக்கொண்டார். யுத்தத்தில் கணவனை இழந்த இவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் அம்பாள்புரத்தில் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றார். இவரது கோழிப்பண்ணையை நாளடைவில்...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் சமய முறைப்படி திருமணத்தில் இணைந்துகொண்டவர்களுக்கான சட்ட ரீதியான திருமணப்பதிவு வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இராசேந்திரம் குருபரன் தலைமையில் இத்திருமணப்பதிவு நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவின் ஒழுங்குப்படுத்தலில் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. திருமணப் பதிவுகளுக்கு அழைக்கப்பட்ட 19 சோடிகளில் கலந்து கொண்ட 12 சோடிகளுக்கு...

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் சங்க ஊழியர்களுக்கும் இடையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் புதன்கிழமை (21) பிற்பகல் கைகலப்பு ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வட்டக்கச்சி வழித்தட சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை பேருந்தை, வட்டக்கச்சியில் இடைமறித்த தனியார் பஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள்,...

இரணைமடுக்குளத் திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாத்திரம் அல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப்பாதுகாப்பும் இரணைமடுக் குளத்திலேயே தங்கியுள்ளது. இதனால்தான், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் எடுத்து வரும் மத்திய அரசின் திட்டத்துக்குப் பதிலாக நாம் மாற்றுத் திட்டத்தை முன்வைக்க நேர்ந்தது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இரணைமடுக்குளத்தின் 95ஆவது...

All posts loaded
No more posts