- Wednesday
- September 10th, 2025

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறியும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியும் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் தடைசெய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் அவதானத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த கால யுத்தம் காரணமாக...

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் 700 க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட பள்ளியாறு, வண்ணிக்குளம், மண்டகலாறு, பண்ணங்கண்டி,நெடகலியாறு பகுதிகளிலும், முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட முதியகட்டு பகுதியிலும், வன்னி பாதுகாப்பு தலைமையகத்துக்குற்பட்ட கொக்கிலாய்,...

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,...

இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் நேற்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது நீரில் மூழ்கியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, அழகரத்னம் வீதியில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்....

அடாது தொடர்ந்து பெய்;து கொண்டிருக்கும் மழையின் மத்தியிலும் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மரநடுகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. வவுனியா ஒமந்தையில் நேற்று சனிக்கிழமை(14.11.2015) 15ஏக்கர் பரப்பளவில் தேக்கமரக்காடு ஒன்றை உருவாக்கும் நோக்குடன் தேக்க மரக்கன்றுகளின் நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாய பூர்வமாக தேக்கமரக்கன்றுகளை நட்டு நடுகையை...

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையால் வெள்ள நீர் மற்றும் குளத்துக்கு மேலால் மேவிப் பாயும் நீர் என்பன மக்கள் குடியிருப்பினூடு பாய்ந்து வருகிறது. வெள்ள நீருடன் சேர்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்குமுதலை ஒன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்தே இச் சிறுமியை தாக்கியுள்ளது. கனகலிங்கம் விதுசா என்கிற இச்சிறுமி கிளிநொச்சி...

தீபாவளி தினமான 10-11-2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் புத்தாடை அணிந்து மிக மகிழ்வாக தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாடினர். மகிழ்வான தீபாவளியன்று அருள்மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னர் சகோதர இல்லமான முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தனர். அங்கு தமது மதிய உணவின் பின்னர் அங்கு...

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும்மழை காரணமாக முக்கிய குளங்கள் வான் பாயும் நிலையில் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்;ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்தது. 10 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 10 அடியாகவும் 9 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம்...

தனது மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மகளிர் அரசியற்துறை மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிசி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காக தனது மகள் போராட்டத்தில் இணைந்ததாகவும், இறுதிவரை...

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் மின்னல் தாக்கி உடல் கருகி பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் மன்னாகண்டல் சந்தியை அண்மித்த வேளை நடைபெற்றது. இதில் புதுக்குடியிருப்பு 7ஆம் வட் டாரத்தைச் சேர்ந்த நடராசா ரவி (வயது 50) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார். இது...

வடமாகாணத்தில் உள்ள 102 வைத்தியசாலைகளில் 32 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்திறப்பு விழாவில்கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாணத்தில்...

யாழ் எய்ட்டின் முன்னால் போராளிகளுக்கு உதவும் செயற் திட்டத்தின் கீழ் இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையில் வாழ்வியலை கொண்டு நடாத்துவதற்கு சிரமப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த முன்னால் போராளிக்கு வவுனியாவில் வைத்து முன்னர் ஒரு தொகைப்பணம் வழங்கி வைக்கப்பட்டதுடன் நல்லின பசுமாடும் கன்றும் திருமலை மொரவெவவில் உள்ள அவரின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது.அத்துடன் அங்கவீனமான முன்னால் போராளிகள்...

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான காணியை பிரிகேடியர் வனசிங்க தலைமையிலான 682 ஆவது காலால் படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளதாக காணியை இழந்த மக்கள் தெரிவித்துள்ளனர். வடக்கில் புதுக்குடியிருப்பு - புதுமாத்தளன் வீதியையும், கிழக்கில் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியையும், தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள வீதிகளையும் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணியில் ஏழே முக்கால்...

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது. ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய 70 அடி நீள திமிங்கலம், கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இந்த தகவலை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு...

கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 அளவில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டோ அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அந்தப் பகுதியிலுள்ள மூடியிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இதில்...

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட தலைவர் திரு ஸ்ரீஞானேஸ்வரன் திருமதி சிறீஞானேஸ்வரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார பொறுப்பாளர் திரு அண்ணாத்துரை ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். நேற்று காலை பரந்தன் சிவபுரத்தில் தமிழினி அவர்களது புகழுடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் இறுதி நிகழ்விலும் பங்குபற்றியிருந்தனர். இறுதி...

தமிழ் மக்களின் விடிவுக்காக சுமார் இரண்டு தசாப்தங்களாக போராடி இன்று மீளாத்துயிலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளராகவிருந்த தமிழினி அவர்களது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அஞ்சலி செலுத்தினர். பரந்தன் சிவபுரத்தில் உள்ள தமிழினி அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

All posts loaded
No more posts