- Tuesday
- September 9th, 2025

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினியின் பூதவுடலுக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அஞ்சலி செலுத்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த தமிழினியின் பூதவுடல் கிளிநொச்சி பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுச் செல்லபட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவை...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளன. அவரது உடலத்தைக் உறவினர்களிடம் கையளிப்பதில் சிக்கல்கள் எழலாம் என சிக்கல்கள் எழுந்திருந்தன. எனினும் நேற்றைய தினமே தமிழினியின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரது சொந்த இடமான கிளிநொச்சி - பரந்தனுக்குக் கொண்டுவரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது...

கடந்த 2009 ற்கு முன்னரான காலத்தில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின்போது காயமடைந்து முள்ளந்தண்டு பாதிப்பிற்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்த நிலையில் வாழும் இளைஞர் ஒருவருக்கு மூன்று லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைப் பள்ளி நிர்வாகத்தினால் அனுப்பப்பட்ட நிதி தமிழ்த்...

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தகவல் தொடர்பாடல் மற்றும் மனிதவள இராஜதந்திர...

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளிளிற்கு ஆதரவாகவும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று ஏ9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. இன்று...

யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்து பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற எமது மக்களுக்கு உதவிட முன்வருமாறு தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. வன்னி விழிப்புணர்வற்றோர் சங்க வெள்ளை பிரம்பு தின நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற போது நிகழ்வின் சிறப்பு...

வடமாகாண விவசாய அமைச்சால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக தரிசனம் நிறுவனத்தின் 2..5 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (13.10.2015) திறந்து வைத்துள்ளார். இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் மொனராகலை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமே உள்ளது....

கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவிகளை மறைமுகமாக பாடசாலைப் பணியாளர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து வருவதாகவும் இதனால் மாணவிகள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகின்றது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில்; உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பிரிவுகளில் கல்வி...

காடழிப்பை ஜனாதிபதியால் கூட தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முல்லைத்தீவு, கொத்தம்பியாகும்பம் என்ற இடத்தில் காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லீம் மக்கள் குடியேற்றப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

கஸ்டப் பிரதேசத்தில் கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக திங்கட்கிழமை (12) போராட்டம் மேற்கொண்டனர். 2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமனம் பெற்று கடமையாற்றிய இவர்கள், 5 வருடங்கள் என்ற கட்டாயக்...

கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புகளில் கல்விக்கற்கும் மாணவிகளை பாடசாலைப் பணியாளர் ஒருவர், அலைபேசியில் மறைமுகமாக புகைப்படங்கள் எடுத்து வருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரம் மற்றும் உயர்தரத்தில் கல்விக்கற்று...

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்குவதில், தமிழர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகமும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. இதுகுறித்து, செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலர், தம்பு சேதுபதி கூறியதாவது: வட மாகாணத்தில், கட்டி வரும் வீடுகளை...

கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள தகுதியிருந்தும் வீடுகள் கிடைக்காத தனி நபர் மற்றும் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்டோரின் விவரங்களை பிரதேச செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் மிகவும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடும்...

காந்தீயம் அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயா நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மருத்துவமனையில் காலமானார். 1924 ஆண்டு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை – கரம்பொன்னில் பிறந்த சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற முழுப்பெயரைக் கொண்ட இவர் லண்டன், கென்யா போன்ற நாடுகளில் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி தாயகம் திரும்பினார். நாடு திரும்பிய அவர் ராஜசுந்தரம் போன்றவர்களுடன்...

இலங்கை அரசு தமிழ் இனஅழிப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய குற்றச்சாட்டுக்கும் ஆளாகிச் சர்வதேசத்தின் முன்னால் இன்று தலைகுனிந்து நிற்கிறது. இக்குற்றச்சாட்டுகளோடு, இலங்கை அரசு தமிழ் மக்களைப் பட்டினியால் கொலை செய்த பட்டினிச்சாவுக் குற்றச்சாட்டுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து...

வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு பிரதேசத்தில் வசிக்ககூடிய நபர் ஒருவரின் உறவினருக்கு அந்த வீட்டில் குடியிருந்து வருவதாக வதிவிட சான்றிதழ் ஒன்றை...

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 தொண்டர் ஆசிரியர் வடமாகாண சபையின் முன்பாக வியாழக்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பல...

வருடந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நேற்று காலை ஒன்பது மணிக்கு இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் போன்ற இடங்களில்...

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல்...

All posts loaded
No more posts