இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க கப்பம் கோரும் கடற்கொள்ளையர்கள்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், இலங்கைக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிவந்த வர்த்தகக் கப்பலை விடுவிக்க கப்பம் கோரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலை தேடும் பணிகளில் ஈடுபட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட படகில் எட்டு பேர் அடங்கிய குழுவினர் பயணித்திருந்ததாகவும், அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் வெளிவிவகார...

வளர்ப்புத் தாயினால் தாக்கப்பட்டு 4 வயது சிறுவன் உயிரிழப்பு?

மட்டக்களப்பு – நாவற்குடா – மாதர் வீதியில் வசித்துவந்த 4 வயது சிறுவன் ஒருவர், தனது வளர்ப்புத் தாயின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் வளர்ப்புத் தாய் காத்தான்குடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதான குறித்த தாய் நூலகமொன்றில் பணியாற்றுபவர் என...
Ad Widget

வரிச்சலுகையை பெற மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச மட்டத்திலான அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அமர்வின் போது, அரசியலமைப்பை...

கடுகு படத்தை வாங்கியது ஏன்? சூர்யா

சிறிய பட்ஜெட்டில் கோலி சோடாவை கொடுத்து வெற்றி பெற்ற விஜய் மில்டன், பெரிய பட்ஜெட்டில் பத்து எண்றதுக்குள்ள படத்தை கொடுத்து தோல்வி அடைந்தார். ஒரு வெற்றி, ஒரு தோல்விக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி உள்ள படம் கடுகு. இதில் பரத், ராஜகுமாரன், சுபிக்ஷா, ராதிகா பிரதிஷ்டா உள்பட பலர் நடித்துள்ளார்கள். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்....

15 நாளில் தயாரான படம்

ஜித்தன் 2, கிரிங் கிரிங் போன்ற திகில் படங்களை இயக்கியவர் ராகுல். இவர் தற்போது இயக்கி இருக்கும் 3வது திகில் படம் 1 ஏ.எம் இதில் புதுமுகங்கள் மோகன், சவ்ரவ், பிரதீப் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.என்., சினிமா சார்பில் இயக்குனர் ராகுலே தயாரித்தும் உள்ளார். படம்...

நாளை வெளியாகும் ‘பாகுபலி-2’ டிரைலர் பற்றிய சில தகவல்கள்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த டிரைலர் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ‘பாகுபலி-2’ டிரைலர் 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளில்...

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஆரம்பம்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான வரலாற்று டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியானது பங்களாதேஷ் அணிக்கு மிகவும் முக்கியத்துவமான போட்டியாக அமைந்துள்ளது. கிரிக்கெட் உலகில் இணைந்து 16 வருடங்கள் 4 மாதங்கள் மற்றும் 8 நாட்களை நிறைவுசெய்யும் பங்களாதேஷ் அணி தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று (15) விளையாடவுள்ளது. இந்த...

சுன்னாகம் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமணனின் பெயர் V அறிக்கையில் இல்லை

புன்னாலை கட்டுவான் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞனின் பெயரை , கொள்ளை சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சுன்னாகம் காவல்துறையினர் தாக்கல் செய்த V அறிக்கையில் குறிப்பிடவில்லை என சாட்சியம் அளிக்கப்பட்டு உள்ளது. சுன்னாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞன் சித்திரவதை...

நிறம் மாறும் 1 ரூபா மற்றும் 5 ரூபா

புதிதாக சுற்றோட்டத்துக்கு விடப்படவுள்ள 1 ரூபா நாணயக் குத்தியினதும் 5 ரூபா நாணயக் குத்தியினதும் உலோகங்களை துருப்பிடிக்காத உருக்கிற்கு (வெள்ளி நிறம்) மாற்றப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 1 ரூபா மற்றும் 5 ரூபா நாணயக் குத்திகளின் பித்தளை முலாமிட்ட (தங்க நிறம்) மாற்றப்படவுள்ளது. இதேவேளை 5 ரூபா நாணயக் குத்தியின் விளிம்பில்...

முன்னாள் பெண் புலி உறுப்பினர் உட்பட மூவர் கைது

வெள்ளவாய, கொடவெஹரகள பகுதியில் வைத்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர் உட்பட மூவர் வெள்ளவாய பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்ற வேளையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் முல்லை தீவு பகுதியை சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் கொடவெஹரகள பகுதியை சேர்ந்தவர்கள்...

மின்சார சபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (15) தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டாலும், எந்தவொரு மின்சாரத் தடையும் நாட்டில் ஏற்பட மாட்டாது எனவும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அச்சபை அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த 3 பெண்கள் உட்பட 24 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் இன்று (புதன்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த இவர்களிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது....

ஜனாதிபதியிடம் முதுகெலும்பு உள்ளதா என கேட்கும் நிலை தமிழர்களுக்கு ஏற்படும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதுகை தடவி உங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? என தமிழ் அரசியல் தலைமைகள் கேட்கும் நிலை வரலாம். எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்கவின் முதுகை தடவி உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா? என ஈ.எம்.பி நாகநாதன் என்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட வரலாறுகள் உள்ளது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாணசபை எதிர்கட்சியில் உள்ள சிங்கள உறுப்பினர்களை...

ஸ்ரீலங்கா பணியாளர்களை காப்பாற்ற விசேட குழு; வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கப்பல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சு, கடற்படை மற்றும் விமான படையினருடன் இணைந்து இன்று விசேட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. ஏரீஸ் 13 என்ற எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி மாலை...

புலிகளுக்கு நிதி சேகரித்தமை பயங்கரவாதச் செயற்பாடு! : ஐரோப்பிய நீதிமன்றம்!

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மோதலின்போது ஆயுதப்படைகளின் செயற்பாடுகள் தீவிரவாதம் எனக் கருதமுடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், டச்சு நீதிமன்றத்தினால் தமது...

10 இராணுவ வீரர்கள் வழக்கிலிருந்து விடுவிப்பு

அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதியிலிருந்து, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரு பொதுமகன்கள் காணாமற்போன விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட 5 இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 10 இராணுவ வீரர்களையும், இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை உத்தரவிட்டார். கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம்...

வடமாகாணசபை நியமனங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்!

வடமாகாண சபையால் வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பில், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை” என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் விசேட அமர்வொன்று, நேற்று(14) இடம்பெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “வடமாகாண சபையால் வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பிலும் வடமாகாண உயரதிகாரிகள் மீதும்,...

முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரருக்கு விளக்கமறியல்

கொழும்பில் உள்ள தாமரைத் தடாக வளாகத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் சுத்திகரிப்பு வேலையைச் செய்துகொண்டு மிகவும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரே இவ்வாறு விளக்கமறியலில்...

பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கு அண்மையில் ஹெரோய்ன் விற்பனை செய்த ஜோடி கைது!

வவுனியா நகரத்தில் பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கு அண்மையில் ஹெரோய்ன் விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் ஒரு ஜோடி உள்ளிட்ட மூவரை, ஹெரோய்னுடன் நேற்று (14) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். அரச நிறுவனங்கள் பலவற்றுக்கு முன்பாக, டயர் பட்டறை நடத்தும் போர்வையில், நீண்டகாலமாக இவ்வாறு ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுவந்தமை கண்டறியப்பட்டுள்ளது. ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை...

யாழில் திருட்டில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் நன்னடத்தை பாடசாலைக்கு

அச்சுவேலி தம்பாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சிறுவர்கள் நால்வரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார். கடந்த 09ம் திகதி தம்பாலை டச்சு றோட் பகுதியில்...
Loading posts...

All posts loaded

No more posts