Ad Widget

வடமாகாணசபை நியமனங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்!

வடமாகாண சபையால் வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பில், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை” என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் விசேட அமர்வொன்று, நேற்று(14) இடம்பெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“வடமாகாண சபையால் வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பிலும் வடமாகாண உயரதிகாரிகள் மீதும், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை.

முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளில், உண்மைத்தன்மை இருக்க வேண்டும். உண்மையற்ற குற்றச்சாட்டுகளால், அவற்றை முன்வைப்பவருக்கு மட்டுமன்றி அவைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்படுகின்றது.

எனவே, உண்மையற்ற குற்றச்சாட்டுகள், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். குறித்த அதிகாரிகள் மீது, அவைக்கு நம்பிக்கை உள்ளது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். ஆனால், அவற்றின் உண்மை குறித்து ஆராய்ந்த பின் முன்வைக்கப்பட வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகள் கண்டிக்கபட வேண்டியன” என்று, அவைத்தலைவர் மேலும் கூறினார்.

Related Posts