Ad Widget

யாழில் திருட்டில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் நன்னடத்தை பாடசாலைக்கு

அச்சுவேலி தம்பாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சிறுவர்கள் நால்வரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.

கடந்த 09ம் திகதி தம்பாலை டச்சு றோட் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் யாரும் இல்லாத நேரம் பார்த்து உள் நுழைந்த திருடர்கள் ஒரு பவுண் தங்கச்சங்கிலி, ஒரு மோதிரம் மற்றும் 23 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடியிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டிருந்தான்.

அவனிடம் மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து அவர்கள் சிறுவர் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணியின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது, வழக்கினை விசாரித்த நீதவான் சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

Related Posts