- Monday
- June 15th, 2026
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் குவரி யாசீன், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் பக்டிக்கா மாகாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாசின், 2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து இலங்கை அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் என கூறப்பட்டு வந்தது....
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது அப்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் இன்று எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றார் என்றால் அதற்கு விடுதலைப் போராட்டமே காரணமென தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் நிர்வாகத்துறை துணை பொறுப்பாளராக செயற்பட்ட இளஞ்சேரனின் மனைவி, ஆனால் அதனை மறந்து சம்பந்தன் செயற்படுகின்றார் என குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம், இன்று...
பாடசாலை மாணவன் ஒருவரின் கையில் ஆசிரியர் ஒருவர் கற்பூரம் கொழுத்திய சம்பவம் ஒன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது கையில் வகுப்பு ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை கற்பூரத்தை கொழுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் மாணவி ஒருவரின் 20 ரூபா...
மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான காரணங்கள் எதுவுமே கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவற்றுக்கான தேர்தலை நடத்தாது, காலம் தாழ்த்த வேண்டியது அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் பூர்த்தியாவதாக சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளுாராட்சி...
இலங்கையில் 2017, கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 55 பேர் எச்.ஐ.வி நோயாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த எச்.ஐ.வி பாதிப்பிற்குள்ளானவர்கள் பெரும்பாலும் ஆண்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எச்.ஐ.வி பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்...
சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறுகிறது. அர்ஜுன் கிராமத்து அதிரடி வில்லனாக நடிப்பதாக...
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார். அவர் சொல்லும்போது, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து...
இசையமைப்பாளர் இளயராஜாவால் அனுப்பப்பட்ட சட்ட எச்சரிக்கை அறிக்கையை தொடர்ந்து இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் படமாட்டேன் என பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அதிரடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். காலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்த, இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்த கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன....
நாட்டில் உள்ள அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமித்தால், பட்டதாரிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படாது என்று சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அதிகளவில் பட்டம் பெற்று வெளியேறிய பெண்கள் உட்பட பட்டதாரிகள் வீதியில் நிற்பது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்றையதினம் இடம்பெற்ற நில மெஹெவர...
ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் எவரும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் எவையும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிராமங்களிலுள்ள தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயரே தெரியாது, அவ்வாறான நிலையில் எவ்வாறு இராணுவ அதிகாரியைச் சுட்டிக்காட்டி...
கனடா ரொறன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். கனடா ரொறன்ரோ மாநகர சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ் பொது நூலக...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது நம்பிக்கையிழந்த மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவரைச் சுட்டுக்கொல்லுமாறு இந்திய இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்ததாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்குச் சென்று தாக்குதலில் ஈடுபடுவதில்லையென சமாதான ஒப்பந்தம்...
யாழ்ப்பாணத்தில் ஒருமாதகாலமாக புதியதொரு சுவாசம் தொடர்புபட்ட நோய் பரவிவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் இந்நோயினால் சராசரியாக நாளொன்றுக்கு 1000 பேர் வரையில் சிகிச்சைக்கு வந்துசெல்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்நோயின் தாக்கம் தொடர்பாகவும், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் வைத்தியர் ஜமுனாந்தா தெரிவித்ததாவது, தற்போது...
கிளிநொச்சியில் 28 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முதலமைச்சரின் காலில் விழுந்து தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கதறி அழுதுள்ளனர். அத்துடன் தமது உறவுகளின் விடுதலைக்கு முதலமைச்சர் முயற்சி எடுக்கவேண்டுமெனவும், தங்களுக்காக குரல்கொடுக்கவேண்டுமெனவும் அவரின்...
“உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதோலோ அல்லது அத்தகைய உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுவதாலோ, நீதி விசாரணை நடத்தப்படக் கூடாது, நீதி விசாரணை தேவையில்லை என்று எவரும் சொல்ல முடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமானது நீதி விசாரணைகளை மேற்கொள்ளாது உண்மை கண்டறியும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருக்கும்...
யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவிகளை வழங்க கனடா - டொரென்டோ மாநகர சபை முன்வந்துள்ளது. இதன்படி, கனடாவின் டொரெண்டோ மாநகர சபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் டொரெண்டோ மாநகர சபை சார்பாக நகர முதல்வர் John Tory யாழ்ப்பாண மாவட்டம் சார்பாக வடமாகாண முதலமைச்சர்...
யாழ்ப்பாணத்தில் கொள்ளை மற்றும் கப்பம் பெறும் செயற்பாடுகளில் பிரதானமாக ஈடுபட்டு வரும் ஆவா குழுவினருடன் தொடர்புடையதாக சந்தேகநபர்கள் 3 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாண பொலிஸூடன் தொடர்புடைய சில குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை...
இலங்கை அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று பங்களாதேஸ் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. பங்களாதேஸ் அணிக்கு இது நூறாவது போட்டியாகும். இலங்கைகான சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது....
திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 தினங்களாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனையின் முன்னே சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், ஞாயிறன்று மாலை...
Loading posts...
All posts loaded
No more posts
