காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்: தாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வயது முதிர்ந்த தாய் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 30 நாட்களாக முன்னெடுத்து வரும் குறித்த போராட்டத்தில் அதிக வெப்பம் காரணமாக குறித்த தாய் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, விஷேட அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி பொது...

15 வயது மாணவனைக் காணவில்லை!

புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைச்சேர்ந்த சுந்தர்லிங்கம் யோன்சன் வயது 13 என்ற மாணவனை கடந்த 15 ம் திகதி முதல் காணவில்லை என அவரது தந்தையாரால் புதுக்குடியிருப்பு காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவனின் தந்தையாரான சுந்தரலிங்கம் என்பவர் மாற்றுத்திறனாளி என்பதோடு இந்த மாணவனின் தாயாரை செல்வீச்சின்போது பறிகொடுத்தும் 3பெண் சகோதரர்கள் பராமரிப்பு இல்லங்களிலும் வாழ்ந்துவருவதோடு சகோதரன்...
Ad Widget

மாணவனின் கையில் கற்பூரத்தைக் கொளுத்திய ஆசிரியைக்கு இடமாற்றம்

மாணவனின் கையில் கற்பூரத்தைக் கொளுத்திய ஆசிரியைக்கு, இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக, ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார். மாணவி ஒருவரின் பணத்தைத் திருடிய சந்தேகத்தில், ஆசிரியை ஒருவர், மாணவர்கள் அறுவரின் கைகளில் கற்பூரத்தைக் கொழுத்தியச் சம்பவமொன்று, பொகவந்தலாவ பிரதேச தமிழ்ப் பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவை ரொப்கில் தமிழ் வித்தியாலயத்திலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக, மாணவரொருவரின் வலது...

மகிந்த அரசு வன்வலுவால் செய்ததை மைத்திரி அரசு மென்வலுவால் சாதிக்கிறது : பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

இராணுவத்திடம் இருக்கும் தங்களுடைய நிலங்களைத் தங்களிடம் மீளவும் தாருங்கள் என்று எமது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அரசாங்கம் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரால் நிலப்பறிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ முகாம்களை விரிவுபடுத்துவதற்காக எமது பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டன. இப்போது பச்சை முகமூடி அணிந்து கொண்டு காடுகளை...

மணிரத்னத்துடன் 25 வருடம் பயணம்- ரஹ்மான்

மணிரத்னத்துடன் 25 வருடம் பயணிப்பது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று ரஹ்மான் பெருமிதம் கொண்டுள்ளார். ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு, மணிரத்னம் இயக்கியுள்ள படம் ‛காற்று வெளியிடை'. கார்த்தி, அதிதி ராவ் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ராணுவ பின்னணியில், ஒரு அழகிய காதல் கதையாக இப்படம் உருவாகி உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரோஜா படம்...

வருகிற வெள்ளிக்கிழமை 13 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரத்தின் கடைசியிாள, வெள்ளிக்கிழமை தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் ரிலீசாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுவதாக கூற முடியாது. முன்பெல்லாம் 50 நாள்கள் அல்லது 100 நாள்கள் ஓடினால் தான் படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் படங்கள் 2 முதல் 3 நாள்கள் திரைகளில் முழுவதுமாக...

ஆசிரியர்களே கவனம்! இப்படியும் ஒரு சுத்துமாத்து!

வன்னிப் பிரதேசத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு தொலைபேசி அழைப்புகள் செல்கின்றன. நாங்கள் வடக்கு மாகாணக் கல்வித் திணைக் களத்தில் இருந்து கதைக்கிறோம், தூரஇடங்களில் இருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கான ஏற்பாடொன்று உள்ளது. அதற்கான முடிவு திகதி இன்று.சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிளினைப் பெறவிரும்பும் ஆசிரியர்கள் உடனடியாக குறித்த கணக்கு இலக்கத்திற்கு...

தனியார் மருத்துவ சேவைகளிலிருந்தும் ஒதுங்க முஸ்தீபு- GMOA

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்குமாயின் எதிர்வரும் ஏப்றல் மாதம் முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் ஹரித...

அரச நில அளவைத் திணைக்களத்தை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் பத்திரம் தயார்

அரச நில அளவைத் திணைக்களத்தை மூடிவிட்டு, அரசின் சகல நில அளவைப் பணிகளையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கையொப்பமிடுவதற்கு காணி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யு. எம். பி.பீ. உதுகொட அறிவித்துள்ளார். இவ்வாறு நில அளவைப் பணிகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதானது நாட்டின்...

தேர்தல் ஆகஸ்டிற்கு முன்னர்- மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான சகல பத்திரங்களுக்கும் அமைச்சரவையின் அனுமதி விரைவாக கிடைக்கப் பெறுமாயின் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடமராட்சி பகுதியில் வயோதிபர் மீது வாள் வெட்டு

வடமராட்சி பகுதியில் வயோதிபர் மீது கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் வயோதிபர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வடமராட்சி அல்வாய் மகாத்மா வீதியை சேர்ந்த கு. கந்தசாமி (வயது 72) எனும் வயோதிபரே தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். குறித்த வயோதிபரின் வீட்டுக்கு ஞாயிறு இரவு மோட்டார் சைக்கிளில்...

தமிழக மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு கடற்பகுதியில் கைது

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கைது நடவடிக்கை நெடுந்தீவு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு வழங்க தனியார் நிறுவனங்கள் மறுப்பு : வட மாகாண பட்டதாரிகள் கவலை

தம்மீது ஏற்பட்ட நம்பிக்கையீனம் காரணமாகவே வேலைவாய்ப்பு வழங்க தனியார் நிறுவனங்கள் மறுப்பு தெரிவிப்பதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் அரச வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தனியார் நிறுவனங்களை விட்டு வெளியேறுவுதாக குறித்த நிறுவுனங்கள் தெரிவிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்...

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர் ; இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு

வன்னியில் இடம்பெற்ற மூன்றுதசாப்தகால போரில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான தி ஐலண்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில்...

ஐநாவில் பணியாற்றவுள்ள சிறிலங்காப் படையினருக்கு காங்கேசன்துறையில் பயிற்சி!

ஐநா அமைதிகாக்கும் படையணியில் பணியாற்றவுள்ள சிறிலங்காப் படையினரின் அணியொன்றுக்கு காங்கேசன்துறையில் ஒத்திகைப் பயிற்சி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது எதிர்வரும் 27ஆம் நாள் காங்கேசன்துறையில் ஆரம்பித்து 9 நாட்கள் 1166 கி.மீ பயணம் செய்து, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சூரியவெவவில் நிறைவடையவுள்ளது. மாலியில் பணியாற்றும் ஐநாவின் சண்டை வாகனத் தொடரணியில் பணியாற்றவுள்ள சிறிலங்காவின் 15 அதிகாரிகள் மற்றும்...

கர்ப்பிணி கொலை : கணவனின் இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்ள உத்தரவு

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் கணவரின் இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணியும் 4 வயது சிறுவன் ஒருவரின் தாயான ஞானசேகரம் ஹம்சிகா (வயது...

தேங்காய், இளநீர் விலை யாழில் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் தேங்காய் மற்றும் இளநீர் என்பன அதிகூடிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தேங்காய் ஒன்று 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், இளநீர் 120 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் வரட்சியான காலநிலை நிலவுவதுடன், ஒருவகை வைரஸ் காய்ச்சலும் பரவி வருகின்றது....

முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்

“வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது. முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் நோர்வே முதலிடம்!

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று (20) அனுஸ்டிக்கப்படுகின்றது. இதன்படி, மகிழ்ச்சியான நாடுகள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதன் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இலங்கை இந்த வருடம் 120ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்தியா 122 ஆவது இடத்தையும் அமெரிக்கா 14 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த வகையில்,...

இனப்படுகொலை தொடர்பில் சுமந்திரனை தன்னுடன் நேரடி விவாதத்துக்கு அழைக்கும் சுகாஸ்

நேற்று முன்தினம் (1 9 . ௦ 3. 2 ௦ 1 7 ) இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இல்லை இனக் குறிப்பிட்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஜெனிவாவில் ஈழத் தமிழர்கள் சார்பில் கலந்துகொண்டிருக்கும் பிரபல சட்டத்தரணி சுஹாஸ்...
Loading posts...

All posts loaded

No more posts